• Oct 30 2024

Chithra / Jun 17th 2023, 6:28 am
image

Advertisement

மேஷம்


பங்காளி சண்டையை பஞ்சாயத்து மூலம் முடிவுக்கு கொண்டு வருவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் இறுதி வெற்றியை பெறுவீர்கள். உடன் வேலை பார்க்கும் பெண்ணின் உள்ளத்தை கவர்வீர்கள். வித்தியாசமான முயற்சியில் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். தந்தையார் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பீர்கள்.

ரிஷபம்


புதிய முயற்சியில் இறங்கினால் தோல்வியை சந்திப்பீர்கள். வியாபார எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவீர்கள். வருடாந்திர மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ள மறக்காதீர்கள். வீட்டிலும் வெளியிலும் அவமரியாதை அடைவீர்கள். . காதலியின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள்.

மிதுனம்


உறவினர்கள் சண்டையால் உறக்கத்தை தொலைப்பீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு எதிரிகளின் இடையூறு ஏற்படும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பெண்களின் அன்பை பெரும் முயற்சியில் தோல்வியடைவீர்கள். வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றி சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணத்தில் பெரிய அனுகூலம் பெற மாட்டீர்கள்

கடகம்


வர்த்தகத் துறையில் சிக்சர் அடிப்பீர்கள். எதிர்பார்த்ததை விட வியாபாரத்தில் அதிகம் லாபம் பார்ப்பீர்கள். மைத்துனருக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். வேலை திறனை வெளிப்படுத்தி மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வெளியிடங்களில் உங்களின் செல்வாக்கை உயர்த்தி பிடிப்பீர்கள். தாராளமாக பண வரவு வந்து கையில் காசு பார்ப்பீர்கள்.

சிம்மம்


துணிச்சலுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அந்நிய நாட்டில் இருந்து பொருளை இறக்குமதி செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். கஷ்டமே இல்லாமல் கன்னிப் பெண்களின் மனதை கொள்ளை அடிப்பீர்கள். வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபம் சம்பாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

கன்னி


இல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தையாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து வைப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து திடீர் அழைப்பு வரும். உங்களின் மன காயங்களுக்கு மனைவி மருந்தாக இருப்பார். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.

துலாம்


வெட்டி செலவு செய்யாதீர்கள். அவசர தேவைக்காக நகைகளை அடகு வைப்பீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவமானம் அடைவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இல்லாவிட்டால் கை கால்களில் ரத்தக்காயம் அடைவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்

சந்திராஷ்டம நாள். சங்கடத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.

விருச்சிகம்


திருமண பேச்சு முடிவடைந்து கல்யாண வேலைகளை ஆரம்பிப்பீர்கள். அவசியமான நேரத்தில் அன்பு செலுத்தும் பெண்கள் பண உதவியை பெறுவீர்கள். வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். பழைய கடன்களை பக்குவமாக அடைப்பீர்கள். கண்ணால் பேசி மனம் கவர்ந்த காதலியை வசப்படுத்துவீர்கள்.

தனுசு


எதிரிகளின் தொல்லைகளால் தூக்கத்தை இழப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க தடுமாறுவீர்கள். அரசாங்க ஊழியர்கள் அவஸ்தையை சந்திப்பீர்கள். பெண்கள் புரிந்து கொள்ளாமல் உருவாக்கும் பிரச்சனையால் நிம்மதி இழப்பீர்கள். திடீரென்று வயிற்று கோளாறு ஏற்பட்டு அவதிப்படுவீர்கள். அந்நிய பெண்களிடம் விலகியே இருங்கள்.

மகரம்


இரும்பாக இருக்கும் பெண்ணின் மனத்தை கரும்பாக மாற்றுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இடையில் ஏற்படும் சின்னத் தொல்லைகளைக் கிள்ளி எறிவீர்கள். ஆடம்பரமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். விருந்தினர்களுக்கு வீட்டில் சுவை மிகுந்த உணவு கொடுப்பீர்கள். நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள்.

கும்பம்


பணப்புழக்கம் இருந்தாலும் மனக்கவலையால் தவிப்பீர்கள். தேவையில்லாத சிந்தனையால் தூக்கத்தைக் இழப்பீர்கள். மனைவி மக்கள் உறுதுணையால் சற்று ஆறுதல் அடைவீர்கள். உரிய நேரத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். தொழிலை சுமூகமாக நடத்துவீர்கள். வியாபாரத்தில் விருப்பத்திற்கு மாறாக ஏற்ற இறக்கமான லாபம் பெறுவீர்கள்.

மீனம்


வீடு வாங்கி பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள். தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றமான பலனை அடைவீர்கள். திருமண முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

இன்றைய ராசி பலன்கள் 17.06.2023 samugammedia மேஷம்பங்காளி சண்டையை பஞ்சாயத்து மூலம் முடிவுக்கு கொண்டு வருவீர்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் இறுதி வெற்றியை பெறுவீர்கள். உடன் வேலை பார்க்கும் பெண்ணின் உள்ளத்தை கவர்வீர்கள். வித்தியாசமான முயற்சியில் வியாபாரத்தில் வெற்றி பெறுவீர்கள். தந்தையார் உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்ப்பீர்கள்.ரிஷபம்புதிய முயற்சியில் இறங்கினால் தோல்வியை சந்திப்பீர்கள். வியாபார எதிரிகளால் பொருள் இழப்பு ஏற்பட்டு பாதிக்கப்படுவீர்கள். வருடாந்திர மருத்துவ பரிசோதனையை செய்து கொள்ள மறக்காதீர்கள். வீட்டிலும் வெளியிலும் அவமரியாதை அடைவீர்கள். . காதலியின் கோபத்திற்கு ஆளாகாதீர்கள். பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றி வைப்பீர்கள்.மிதுனம்உறவினர்கள் சண்டையால் உறக்கத்தை தொலைப்பீர்கள். தொழில் சம்பந்தப்பட்ட முயற்சிகளுக்கு எதிரிகளின் இடையூறு ஏற்படும். வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திண்டாடுவீர்கள். பெண்களின் அன்பை பெரும் முயற்சியில் தோல்வியடைவீர்கள். வியாபாரத்தில் புதிய சிக்கல் தோன்றி சிரமப்படுவீர்கள். வெளியூர் பயணத்தில் பெரிய அனுகூலம் பெற மாட்டீர்கள்கடகம்வர்த்தகத் துறையில் சிக்சர் அடிப்பீர்கள். எதிர்பார்த்ததை விட வியாபாரத்தில் அதிகம் லாபம் பார்ப்பீர்கள். மைத்துனருக்காக மருத்துவச் செலவு செய்வீர்கள். வேலை திறனை வெளிப்படுத்தி மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வெளியிடங்களில் உங்களின் செல்வாக்கை உயர்த்தி பிடிப்பீர்கள். தாராளமாக பண வரவு வந்து கையில் காசு பார்ப்பீர்கள்.சிம்மம்துணிச்சலுடன் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். அந்நிய நாட்டில் இருந்து பொருளை இறக்குமதி செய்வீர்கள். அடுத்தவருக்கு உதவி செய்து அந்தஸ்தை உயர்த்தி கொள்வீர்கள். கஷ்டமே இல்லாமல் கன்னிப் பெண்களின் மனதை கொள்ளை அடிப்பீர்கள். வியாபாரத்தில் இரண்டு மடங்கு லாபம் சம்பாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.கன்னிஇல்லற வாழ்க்கையில் அடியெடுத்து வைக்க தேவையான ஏற்பாடுகளை செய்வீர்கள். ஆடம்பரமான விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தந்தையாருக்கு கண் அறுவை சிகிச்சை செய்து வைப்பீர்கள். வெளிநாட்டில் இருந்து திடீர் அழைப்பு வரும். உங்களின் மன காயங்களுக்கு மனைவி மருந்தாக இருப்பார். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கை உயர்த்துவீர்கள்.துலாம்வெட்டி செலவு செய்யாதீர்கள். அவசர தேவைக்காக நகைகளை அடகு வைப்பீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டு அவமானம் அடைவீர்கள். வாகனங்களில் செல்லும்போது கவனமாக இல்லாவிட்டால் கை கால்களில் ரத்தக்காயம் அடைவீர்கள். அடுத்தவர் விஷயத்தில் தலையிட்டால் சிக்கலில் மாட்டிக் கொள்வீர்கள்சந்திராஷ்டம நாள். சங்கடத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள்.விருச்சிகம்திருமண பேச்சு முடிவடைந்து கல்யாண வேலைகளை ஆரம்பிப்பீர்கள். அவசியமான நேரத்தில் அன்பு செலுத்தும் பெண்கள் பண உதவியை பெறுவீர்கள். வியாபாரத்தை விறுவிறுப்பாக நடத்துவீர்கள். தொழிலில் பொருளாதார முன்னேற்றம் காண்பீர்கள். பழைய கடன்களை பக்குவமாக அடைப்பீர்கள். கண்ணால் பேசி மனம் கவர்ந்த காதலியை வசப்படுத்துவீர்கள்.தனுசுஎதிரிகளின் தொல்லைகளால் தூக்கத்தை இழப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிக்க தடுமாறுவீர்கள். அரசாங்க ஊழியர்கள் அவஸ்தையை சந்திப்பீர்கள். பெண்கள் புரிந்து கொள்ளாமல் உருவாக்கும் பிரச்சனையால் நிம்மதி இழப்பீர்கள். திடீரென்று வயிற்று கோளாறு ஏற்பட்டு அவதிப்படுவீர்கள். அந்நிய பெண்களிடம் விலகியே இருங்கள்.மகரம்இரும்பாக இருக்கும் பெண்ணின் மனத்தை கரும்பாக மாற்றுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால் வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். இடையில் ஏற்படும் சின்னத் தொல்லைகளைக் கிள்ளி எறிவீர்கள். ஆடம்பரமான விழாக்களில் கலந்து கொள்வீர்கள். சுபநிகழ்ச்சிகளுக்கு செலவு செய்வீர்கள். விருந்தினர்களுக்கு வீட்டில் சுவை மிகுந்த உணவு கொடுப்பீர்கள். நோய் பாதிப்பில் இருந்து விடுபடுவீர்கள்.கும்பம்பணப்புழக்கம் இருந்தாலும் மனக்கவலையால் தவிப்பீர்கள். தேவையில்லாத சிந்தனையால் தூக்கத்தைக் இழப்பீர்கள். மனைவி மக்கள் உறுதுணையால் சற்று ஆறுதல் அடைவீர்கள். உரிய நேரத்தில் நண்பர்களின் உதவியை பெறுவீர்கள். தொழிலை சுமூகமாக நடத்துவீர்கள். வியாபாரத்தில் விருப்பத்திற்கு மாறாக ஏற்ற இறக்கமான லாபம் பெறுவீர்கள்.மீனம்வீடு வாங்கி பெற்றோர்களின் ஆசையை பூர்த்தி செய்வீர்கள். புதிய தொழில்கள் தொடங்குவீர்கள். அரசுத் துறையில் அற்புதமாக வேலை செய்வீர்கள். தனியார் துறையில் முதலாளிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். முன்னேற்றமான பலனை அடைவீர்கள். திருமண முயற்சிகளை சாதகமாக முடிப்பீர்கள். ஆன்மீகப் பணிகளில் அதிக ஈடுபாடு காட்டுவீர்கள்.

Advertisement

Advertisement

Advertisement