• Nov 24 2024

இணையவழி முறைமை ஊடாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள நாளை முதல் சந்தர்ப்பம்!

Chithra / Nov 5th 2024, 8:13 am
image

  

இணையவழி முறைமை ஊடாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் நாளை முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. 

கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன்படி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் என பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார். 

எவ்வாறாயினும், இந்தமாத இறுதி வரை கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகள் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக, இந்த முறையின் மூலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பம் முதல் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவசரத் தேவையின் காரணமாக நபர் ஒருவர் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பாராயின், அவர் அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பதில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இணையவழி முறைமை ஊடாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்ள நாளை முதல் சந்தர்ப்பம்   இணையவழி முறைமை ஊடாக கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் நாளை முதல் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடவுச்சீட்டைப் பெற்றுக்கொள்வதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்குத் தீர்வு காணும் வகையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்குள் பிரவேசிப்பதன் மூலம் கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதி மற்றும் நேரத்தினை முன்பதிவு செய்ய முடியும் என பதில் குடிவரவு மற்றும் குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்தமாத இறுதி வரை கடவுச்சீட்டைப் பெறுவதற்கான திகதிகள் வழங்கப்பட்டுள்ளதன் காரணமாக, இந்த முறையின் மூலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பம் முதல் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அவசரத் தேவையின் காரணமாக நபர் ஒருவர் கடவுச்சீட்டைப் பெறுவதற்கு எதிர்பார்த்திருப்பாராயின், அவர் அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமென பதில் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement