• Jun 26 2024

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்பு!samugammedia

Tamil nila / Oct 22nd 2023, 7:05 am
image

Advertisement

இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி தலால் அல் - ஹிண்டி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் ஹமாஸ் ஆயுதக்குழுவின் இராணுவப் பிரிவான அல்-குவாசம் பிரிகேட்ஸின் முக்கிய படைத்தளபதியாகச் செயல்பட்டு வந்துள்ளார்.

இந்நிலையில் காசாவில் உள்ள தலால் அல் ஹிண்டியின் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.

இதில் அல் ஹிண்டி, அவரது மனைவி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியமான இராணுவ தளபதிகள் 6 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பி்டத்தக்கது.

மேலும்,காசா மீது தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தவும் இஸ்ரேல் தயாராகி வருகின்ற நிலையில் வடக்கு காசா மற்றும் காசா நகரில் உள்ள பொதுமக்கள் உடனடியாக காசாவின் தெற்கு பகுதிக்குச் செல்லும்படி இஸ்ரேல் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய தளபதி உயிரிழப்புsamugammedia இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கிய படைத்தளபதி தலால் அல் - ஹிண்டி பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது.இவர் ஹமாஸ் ஆயுதக்குழுவின் இராணுவப் பிரிவான அல்-குவாசம் பிரிகேட்ஸின் முக்கிய படைத்தளபதியாகச் செயல்பட்டு வந்துள்ளார்.இந்நிலையில் காசாவில் உள்ள தலால் அல் ஹிண்டியின் வீட்டை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.இதில் அல் ஹிண்டி, அவரது மனைவி உள்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் முக்கியமான இராணுவ தளபதிகள் 6 பேர் இதுவரை கொல்லப்பட்டுள்ளமை குறிப்பி்டத்தக்கது.மேலும்,காசா மீது தரைவழி தாக்குதலை தீவிரப்படுத்தவும் இஸ்ரேல் தயாராகி வருகின்ற நிலையில் வடக்கு காசா மற்றும் காசா நகரில் உள்ள பொதுமக்கள் உடனடியாக காசாவின் தெற்கு பகுதிக்குச் செல்லும்படி இஸ்ரேல் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement