கடந்த ஜூன் மாதத்தில் 1,38,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி,
கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து 37,934 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது 27.4% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.
இது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளன் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 21.8% அதிகமாகும்.
மேலும், இங்கிலாந்திலிருந்து 11,628 பேரும், சீனாவிலிருந்து 8,804 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,299 பேரும், பாகிஸ்தானியர் 6,833 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 ஆக உள்ளது.
அவர்களில், 241,994 பேர் இந்தியாவிலிருந்தும், 112,312 பேர் ரஷ்யாவிலிருந்தும், 107,902 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை ஜூனில் உயர்வு கடந்த ஜூன் மாதத்தில் 1,38,241 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் வெளியிட்டுள்ள அண்மைய தரவுகளின்படி,கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவில் இருந்து 37,934 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது 27.4% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.இது கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் வருகை தந்த சுற்றுலாப் பயணிகளன் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் 21.8% அதிகமாகும்.மேலும், இங்கிலாந்திலிருந்து 11,628 பேரும், சீனாவிலிருந்து 8,804 பேரும், அவுஸ்திரேலியாவிலிருந்து 7,299 பேரும், பாகிஸ்தானியர் 6,833 பேரும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.அதன்படி, 2025 ஆம் ஆண்டின் முதல் பாதியில் வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,168,044 ஆக உள்ளது.அவர்களில், 241,994 பேர் இந்தியாவிலிருந்தும், 112,312 பேர் ரஷ்யாவிலிருந்தும், 107,902 பேர் இங்கிலாந்திலிருந்தும் வந்துள்ளனர் என அந்த தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.