• Apr 22 2025

கொட்டாஞ்சேனையில் நாளை கட்டுப்படுத்தப்படும் போக்குவரத்து

Thansita / Apr 20th 2025, 9:50 pm
image

கொட்டாஞ்சேனை  பொலிஸ் பிரிவு மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் நாளையதினம் திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் வரையில் ஊர்வலம் மற்றும் சிறப்பு ஆராதனை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளது

குறித்த ஊர்வலமானது கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி போன்ஜின் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கல்பொத்த சந்தியிலிருந்து கல்பொத்த வீதி வழியாக ஜம்பட்டா வீதிக்குச் சென்று ஜம்பட்டா வீதி வழியாக கரையோர புனித அந்தோணியார் தேவாலயம் வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில்  காலை 07.00 மணி முதல் காலை 11.45 மணி வரை கரையோர பொலிஸ் பிரிவில் உள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாற்று வீதிகளை முடிந்தவரை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

கொட்டாஞ்சேனையில் நாளை கட்டுப்படுத்தப்படும் போக்குவரத்து கொட்டாஞ்சேனை  பொலிஸ் பிரிவு மற்றும் கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகளில் நாளையதினம் திங்கட்கிழமை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து கொச்சிக்கடை புனித அந்தோணியார் தேவாலயம் வரையில் ஊர்வலம் மற்றும் சிறப்பு ஆராதனை காரணமாக போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்ட்டுள்ளதுகுறித்த ஊர்வலமானது கொட்டாஞ்சேனை புனித லூசியா தேவாலயத்தில் இருந்து காலை 07.00 மணிக்கு ஆரம்பமாகி போன்ஜின் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி, கல்பொத்த சந்தியிலிருந்து கல்பொத்த வீதி வழியாக ஜம்பட்டா வீதிக்குச் சென்று ஜம்பட்டா வீதி வழியாக கரையோர புனித அந்தோணியார் தேவாலயம் வரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரவிக்கப்பட்டுள்ளதுஇந்நிலையில்  காலை 07.00 மணி முதல் காலை 11.45 மணி வரை கரையோர பொலிஸ் பிரிவில் உள்ள வீதிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மாற்று வீதிகளை முடிந்தவரை பயன்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement