• Mar 28 2024

ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்..!samugammedia

Sharmi / Jun 5th 2023, 9:53 am
image

Advertisement

ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில் சேவை ஆரம்பமாகியுள்ளது.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளான கோர விபத்தில் 17 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.

கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதுடன், 900 ற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையில்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த  விபத்து இடம்பெற்ற இடத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள்  தீவிரமாக நடந்து வந்த நிலையில் 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் என அனைத்தும்  அகற்றப்பட்டுள்ளன.

அத்துடன், தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றது.

இவ்வாறான சூழலில்,  ஒடிசா ரயில் விபத்து சம்பவித்து  51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில் சேவைகள்  தொடங்கியுள்ளன.

மேலும், சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரயிலை மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



ஒடிசாவில் 51 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் ரயில் சேவை ஆரம்பம்.samugammedia ஒடிசாவில்  ரயில் விபத்து இடம்பெற்று 51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும்  ரயில் சேவை ஆரம்பமாகியுள்ளது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனாகாவில் 3 ரயில்கள் விபத்துக்குள்ளான கோர விபத்தில் 17 ரயில் பெட்டிகள் தடம்புரண்டன.கோர விபத்தில் 275 பேர் உயிரிழந்துள்ளதுடன், 900 ற்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்த நிலையில்  மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த  விபத்து இடம்பெற்ற இடத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அகற்றும் பணிகள்  தீவிரமாக நடந்து வந்த நிலையில் 7 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் தண்டவாளத்தில் கிடந்த எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள், சரக்கு ரயில் பெட்டிகள் என அனைத்தும்  அகற்றப்பட்டுள்ளன. அத்துடன், தண்டவாளங்கள் மற்றும் மின் இணைப்புகள் சீரமைக்கும் பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்றது.இவ்வாறான சூழலில்,  ஒடிசா ரயில் விபத்து சம்பவித்து  51 மணி நேரங்களின் பின்னர்  சீரமைப்பு பணிகள் முடிந்து ரயில் சேவைகள்  தொடங்கியுள்ளன. மேலும், சீரமைக்கப்பட்ட பாதையில் சென்ற சரக்கு ரயிலை மத்திய ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் உற்சாகமாக வழியனுப்பி வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement