• Jan 09 2025

சிறைச்சாலை கட்டடம் மீது முறிந்து வீழ்ந்த மரம்; ஒருவர் பலி - 11 பேர் வைத்தியசாலையில்!

Chithra / Jan 2nd 2025, 8:25 am
image

 

மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டடமொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். 

நேற்றிரவு இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. 

சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.

மிதிகம பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

சிறைச்சாலை கட்டடம் மீது முறிந்து வீழ்ந்த மரம்; ஒருவர் பலி - 11 பேர் வைத்தியசாலையில்  மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கட்டடமொன்றின் மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்துள்ளனர். நேற்றிரவு இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்த 12 பேர் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்தார்.மிதிகம பகுதியைச் சேர்ந்த 34 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக காவல்துறை ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement