• Mar 26 2025

ஈஸ்டர் தாக்குதல் தகவல்களை மறைத்த இப்ராஹிமுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

Chithra / Mar 24th 2025, 1:33 pm
image

 

ஏப்ரல் 21 தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய தகவல்களைப் பாதுகாப்புப் படையினரிடமிருந்து மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிமுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஜூலை 2 ஆம் திகதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

இந்த வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் நவரட்ண மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இந்த வழக்கில் இரண்டாவது சாட்சியாகப் பெயரிடப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் முகமது இப்ராஹிமின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பெண் வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. 

மற்றுமொரு சாட்சி வெளிநாடு செல்லும் அபாயம் உள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் தெரிவித்தார். 

இதன்படி, குறித்த சாட்சிக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்ட நீதியரசர், குறித்த நபரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான அறிக்கைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இருந்து வரவழைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.


ஈஸ்டர் தாக்குதல் தகவல்களை மறைத்த இப்ராஹிமுக்கு எதிரான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு  ஏப்ரல் 21 தாக்குதலை நடத்திய இரண்டு தற்கொலை குண்டுதாரிகள் பற்றிய தகவல்களைப் பாதுகாப்புப் படையினரிடமிருந்து மறைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ள தெமட்டகொட பகுதியைச் சேர்ந்த கோடீஸ்வர தொழிலதிபர் மொஹமட் இப்ராஹிமுக்கு எதிராக சட்ட மா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை ஜூலை 2 ஆம் திகதிக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இந்த வழக்கு இன்று (24) கொழும்பு மேல் நீதிமன்ற நீதியரசர் நவரட்ண மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் இரண்டாவது சாட்சியாகப் பெயரிடப்பட்ட கோடீஸ்வர தொழிலதிபர் முகமது இப்ராஹிமின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பெண் வெளிநாடு சென்றுள்ளமை தெரியவந்துள்ளது. மற்றுமொரு சாட்சி வெளிநாடு செல்லும் அபாயம் உள்ளதாக பிரதி சொலிசிட்டர் ஜெனரல் லக்மினி கிரிஹாகம நீதிமன்றில் தெரிவித்தார். இதன்படி, குறித்த சாட்சிக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்ட நீதியரசர், குறித்த நபரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான அறிக்கைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இருந்து வரவழைத்து நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement