• Mar 26 2025

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல்; யோஷிதவுக்கு தொடர்பில்லை!

Chithra / Mar 24th 2025, 1:46 pm
image

  

கொழும்பு - யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு ஏற்பட்ட மோதலுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது.

இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

மோதலின் போது யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். 

இந்த மோதல் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.

இதனையடுத்து, கொம்பனி வீதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில்,  மோதல் ஏற்பட்ட நேரத்தில் யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சம்பவ இடத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் இரவு நேர களியாட்ட விடுதியை விட்டு வெளியேறிய பின்னரே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இரவு நேர களியாட்ட விடுதியில் ஏற்பட்ட மோதல்; யோஷிதவுக்கு தொடர்பில்லை   கொழும்பு - யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு ஏற்பட்ட மோதலுக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு யூனியன் பிளேசில் உள்ள இரவு நேர களியாட்ட விடுதிக்கு கடந்த வெள்ளிக்கிழமை (21) இரவு யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவியுடன் குழுவொன்று சென்றுள்ளது.இதன்போது, இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவுக்கும் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.மோதலின் போது யோஷித ராஜபக்ஷவுடன் சென்ற குழுவினர் களியாட்ட விடுதியின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றிருந்தனர். இந்த மோதல் இரவு நேர களியாட்ட விடுதிக்கு வெளியில் உள்ள சிசிரிவி கமராவில் பதிவாகியுள்ளது.இதனையடுத்து, கொம்பனி வீதி பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தப்பிச் சென்ற சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.இந்நிலையில்,  மோதல் ஏற்பட்ட நேரத்தில் யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் சம்பவ இடத்தில் இல்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.யோஷித ராஜபக்ஷவும் அவரது மனைவியும் இரவு நேர களியாட்ட விடுதியை விட்டு வெளியேறிய பின்னரே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொம்பனி வீதி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement