• May 02 2025

மே தின ஊர்வலத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரேமதாசவின் சிலைக்கு அஞ்சலி

Chithra / May 1st 2025, 1:28 pm
image


32 ஆண்டுகளுக்கு முன்பு மே தின ஊர்வலத்தின்போது குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை கௌரவிக்கும் வகையில் இன்று (01) நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.

கொழும்பில் உள்ள ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்தது.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கடந்த 1993 மே முதலாம் திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் ஜனாதிபதி பிரேமதாசவும் 22 பேரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



மே தின ஊர்வலத்தில் படுகொலை செய்யப்பட்ட பிரேமதாசவின் சிலைக்கு அஞ்சலி 32 ஆண்டுகளுக்கு முன்பு மே தின ஊர்வலத்தின்போது குண்டுவெடிப்பில் படுகொலை செய்யப்பட்ட மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவை கௌரவிக்கும் வகையில் இன்று (01) நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.கொழும்பில் உள்ள ஹல்ஃப்ஸ்டோர்ப் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடந்தது.எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் முதல் பெண்மணி ஹேமா பிரேமதாச மற்றும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள், சிறப்பு விருந்தினர்களுடன் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.கடந்த 1993 மே முதலாம் திகதியன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தின் போது நடந்த தற்கொலைக் குண்டுவெடிப்பில் ஜனாதிபதி பிரேமதாசவும் 22 பேரும் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement