• Apr 28 2024

இலங்கையில் தொடரும் சிக்கல்..! மேலும் நான்கு பேர் உயிரிழப்பு..! samugammedia

Chithra / Nov 9th 2023, 8:16 am
image

Advertisement

 

2023ஆம் ஆண்டு டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதுடன், மேலும் நான்கு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.

மேற்படி டெங்கு நோயினால் உயிரிழந்த நால்வருடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.

இவ்வருடத்தில் இதுவரை 70 ஆயிரத்து 178 வழக்குகள் பதிவாகியுள்ளன, 

இதில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், எண்ணிக்கையில் 14 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.


மேல் மாகாணத்தில் 33,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நவம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 1,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

தற்போது நிலவும் மழை காலநிலையால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.


இலங்கையில் தொடரும் சிக்கல். மேலும் நான்கு பேர் உயிரிழப்பு. samugammedia  2023ஆம் ஆண்டு டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 70 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதுடன், மேலும் நான்கு டெங்கு மரணங்கள் பதிவாகியுள்ளன.மேற்படி டெங்கு நோயினால் உயிரிழந்த நால்வருடன் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆக அதிகரித்துள்ளது.இவ்வருடத்தில் இதுவரை 70 ஆயிரத்து 178 வழக்குகள் பதிவாகியுள்ளன, இதில் அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளதுடன், எண்ணிக்கையில் 14 ஆயிரத்து 884 ஆக அதிகரித்துள்ளது.மேல் மாகாணத்தில் 33,000 க்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், நவம்பர் மாதத்தில் மாத்திரம் இதுவரை 1,685 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.தற்போது நிலவும் மழை காலநிலையால் டெங்கு பாதிப்பு மேலும் அதிகரிக்கும் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்நிலையில், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில், மக்கள் தங்கள் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்துக்கொள்ளவும், நுளம்பு உற்பத்தியாகும் இடங்களை அழிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement