• May 19 2024

புத்தர் சிலை மீது ஏறி ஆடை அணிவித்தவர்களுக்கு சிக்கல்..! விசாரணைகள் ஆரம்பம்

Chithra / Nov 27th 2023, 12:26 pm
image

Advertisement

அனுராதபுரத்தில் புத்தர் சிலைக்கு ஆடை அணிவித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

தொல்லியல் மதிப்புள்ள சிலையின் தற்போதைய தன்மையை மாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அநுராதபுர காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுகனா புத்தர் சிலை நாட்டிலுள்ள “நின்று நிற்கும் புத்தர் சிலைகளில்” ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது.

கி.பி.5ம் நூற்றாண்டில் தாதுசேன மன்னன் இந்த சிலையை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.

சிலையின் அங்கியின் மடிப்புகள் தெளிவாகத் தெரிவதாலும், மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டிருப்பதாலும், அதன் சமநிலையாலும், இந்நாட்டின் கடந்த காலக் கலையின் தனித்துவத்தைக் காட்டும் வடிவமைப்பாக இது கருதப்படுகிறது.

இன்று, தொல்பொருள் மதிப்புடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்களால் வழிபடப்படும் அவுகனா புத்தர் சிலைக்கு ஆடை அணிவிக்கும் பணியில் ஒரு குழுவினர் பணியாற்றுவதைக் காட்டும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.

சிலர் சிலையின் மேல் ஏறி அந்த ஆடையை அணிந்த படங்களும் வெளியானது.

புத்தர் சிலை மீது ஏறி ஆடை அணிவித்தவர்களுக்கு சிக்கல். விசாரணைகள் ஆரம்பம் அனுராதபுரத்தில் புத்தர் சிலைக்கு ஆடை அணிவித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.தொல்லியல் மதிப்புள்ள சிலையின் தற்போதைய தன்மையை மாற்றுவது தண்டனைக்குரிய குற்றமாகும் என தொல்பொருள் திணைக்களம் தெரிவித்துள்ளது.அநுராதபுர காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட அவுகனா புத்தர் சிலை நாட்டிலுள்ள “நின்று நிற்கும் புத்தர் சிலைகளில்” ஒரு தனி இடத்தைப் பெற்றுள்ளது.கி.பி.5ம் நூற்றாண்டில் தாதுசேன மன்னன் இந்த சிலையை உருவாக்கியதாக வரலாறு கூறுகிறது.சிலையின் அங்கியின் மடிப்புகள் தெளிவாகத் தெரிவதாலும், மிக நுணுக்கமாக செதுக்கப்பட்டிருப்பதாலும், அதன் சமநிலையாலும், இந்நாட்டின் கடந்த காலக் கலையின் தனித்துவத்தைக் காட்டும் வடிவமைப்பாக இது கருதப்படுகிறது.இன்று, தொல்பொருள் மதிப்புடன் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பக்தர்களால் வழிபடப்படும் அவுகனா புத்தர் சிலைக்கு ஆடை அணிவிக்கும் பணியில் ஒரு குழுவினர் பணியாற்றுவதைக் காட்டும் பல புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டன.சிலர் சிலையின் மேல் ஏறி அந்த ஆடையை அணிந்த படங்களும் வெளியானது.

Advertisement

Advertisement

Advertisement