• Feb 04 2025

இனப் பிரச்சினைக்கான தீர்வே நாட்டின் உண்மையான சுதந்திர தினம் - சபா குகதாஸ் தெரிவிப்பு!

Chithra / Feb 4th 2025, 8:05 am
image


இலங்கையில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறிய தினம் என்பது தமிழர்களின் சுயநிர்ணய உரிமை முழுமையாக பறிக்கப்பட்ட நாளாகவே அமைந்தது. அதனால் தான் 1948 ஆண்டில் இருந்து இன்று வரை இலங்கைத்தீவில் இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்படாத ஒன்றாக தொடர்கிறது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களை பொருத்தவரை 1948 இலங்கைச் சுதந்திர தினம் என்பது கரிநாள்.அதில் மாற்றுக் கருத்து கிடையாது.

இந்த நிலை மாற வேண்டுமாக இருந்தால் தேசிய இனப்பிரச்சினைக்கு சிங்கள ஆட்சியாளர் உண்மையான தீர்வை வழங்குவதன் மூலமே இலங்கைத் தீவில் உண்மையான சுதந்திர தினத்தை அனைத்து மக்களும் உணரமுடியும்.

தேசிய இனப்பிரச்சினைக்கு இதய சுத்தியுடன் ஆட்சியாளர்கள் தீர்வினைப் பெற்றுக் கொடுக்காது எளிமையாக சுதந்திர தினத்தை கொண்டாடுதல்  மற்றும் ஐனாதிபதி சாதாரண மக்களுடன் அமர்ந்திருந்து படம் காட்டுதல் போன்றன சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போலவே அமையும்.

எனவே நாடு உறுதியாக முன்னோக்கி பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரீதியாக நகர வேண்டுமாயின் சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சுதந்திர தினம் மாற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இனப் பிரச்சினைக்கான தீர்வே நாட்டின் உண்மையான சுதந்திர தினம் - சபா குகதாஸ் தெரிவிப்பு இலங்கையில் இருந்து ஆங்கிலேயர் வெளியேறிய தினம் என்பது தமிழர்களின் சுயநிர்ணய உரிமை முழுமையாக பறிக்கப்பட்ட நாளாகவே அமைந்தது. அதனால் தான் 1948 ஆண்டில் இருந்து இன்று வரை இலங்கைத்தீவில் இனப்பிரச்சினை என்பது தீர்க்கப்படாத ஒன்றாக தொடர்கிறது என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,தமிழர்களை பொருத்தவரை 1948 இலங்கைச் சுதந்திர தினம் என்பது கரிநாள்.அதில் மாற்றுக் கருத்து கிடையாது.இந்த நிலை மாற வேண்டுமாக இருந்தால் தேசிய இனப்பிரச்சினைக்கு சிங்கள ஆட்சியாளர் உண்மையான தீர்வை வழங்குவதன் மூலமே இலங்கைத் தீவில் உண்மையான சுதந்திர தினத்தை அனைத்து மக்களும் உணரமுடியும்.தேசிய இனப்பிரச்சினைக்கு இதய சுத்தியுடன் ஆட்சியாளர்கள் தீர்வினைப் பெற்றுக் கொடுக்காது எளிமையாக சுதந்திர தினத்தை கொண்டாடுதல்  மற்றும் ஐனாதிபதி சாதாரண மக்களுடன் அமர்ந்திருந்து படம் காட்டுதல் போன்றன சிறுவர்களுக்கு மிட்டாய் கொடுத்து ஏமாற்றுவது போலவே அமையும்.எனவே நாடு உறுதியாக முன்னோக்கி பொருளாதார மற்றும் அபிவிருத்தி ரீதியாக நகர வேண்டுமாயின் சகல இன மக்களும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையில் சுதந்திர தினம் மாற்றப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement