• May 17 2024

இலங்கைக் கடற்பரப்பை இந்தியாவுக்கு தாரைவார்த்துக் கொடுக்க முயற்சி!SamugamMedia

Sharmi / Mar 17th 2023, 11:55 am
image

Advertisement

இந்தியாவிலிருந்து அத்துமீறி வருகின்ற மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளானது பல வருடங்களாக எமது மீனவர்களின் வாழ்க்கையை பின்னடைவுக்குட்படுத்துகின்ற விடயமாகக் காணப்படுகின்றது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என். வீ. சுப்பிரமணியம் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

குறிப்பாக 20 வருடங்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்துப் போராடியும் பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் மற்றும் வட்டமேசை கலந்துரையாடல்கள் எனப் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எவ்வித தீர்வுகளும் இல்லை.

கடந்த 22 ம் திகதி வெளிவிவகார அமைச்சர் இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்றத்தில் மும்மொழிவொன்றை முன்மொழிந்துள்ளார். இதை நான் மீனவர் என்ற ரீதியிலும் இலங்கையன் என்ற ரீதியிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்தும் போாடி வருகின்ற நிலையில்  அந்நிய நாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைமை காணப்படுகின்றது. இது ஒரு நாட்டு மக்களின் உணவுக்கு ஏற்படும் பிரச்சினையாகவும் அந்நிய செலாவனி மூலம் வரும் பணத்திற்கு ஏற்படும் பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. எது எவ்வாறாயினும் இப் பிரச்சினையானது ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களின் பிரச்சினையாகவே காணப்படுகின்றது

இந்த பிரச்சினையை ஒட்டுமொத்த இலங்கைவாழ் மக்களும் அந்நியச் செலாவனி வீழ்ச்சியடைவதை பார்த்துக்கொண்டிருக்காது அனைத்து மக்களும்  பாகுபாடின்றி  அனைவரும் கைகோர்த்துநின்று போராடி கடலை தாரைவார்த்துக் கொடுப்பதையும் எமது  அந்நியச் செலாவனி வீழ்ச்சியடைவதையும் மீட்டெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

இலங்கைக் கடற்பரப்பை இந்தியாவுக்கு தாரைவார்த்துக் கொடுக்க முயற்சிSamugamMedia இந்தியாவிலிருந்து அத்துமீறி வருகின்ற மீனவர்களின் மீன்பிடி நடவடிக்கைகளானது பல வருடங்களாக எமது மீனவர்களின் வாழ்க்கையை பின்னடைவுக்குட்படுத்துகின்ற விடயமாகக் காணப்படுகின்றது என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளர் என். வீ. சுப்பிரமணியம் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,குறிப்பாக 20 வருடங்களாக இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை எதிர்த்துப் போராடியும் பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்கள் மற்றும் வட்டமேசை கலந்துரையாடல்கள் எனப் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் எவ்வித தீர்வுகளும் இல்லை.கடந்த 22 ம் திகதி வெளிவிவகார அமைச்சர் இந்திய மீனவர்களுக்கு இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக பாராளுமன்றத்தில் மும்மொழிவொன்றை முன்மொழிந்துள்ளார். இதை நான் மீனவர் என்ற ரீதியிலும் இலங்கையன் என்ற ரீதியிலும் வன்மையாகக் கண்டிக்கிறேன்.இந்தப் பிரச்சினைகளுக்காகத் தொடர்ந்தும் போாடி வருகின்ற நிலையில்  அந்நிய நாட்டுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் நிலைமை காணப்படுகின்றது. இது ஒரு நாட்டு மக்களின் உணவுக்கு ஏற்படும் பிரச்சினையாகவும் அந்நிய செலாவனி மூலம் வரும் பணத்திற்கு ஏற்படும் பிரச்சினையாகவும் காணப்படுகின்றது. எது எவ்வாறாயினும் இப் பிரச்சினையானது ஒட்டுமொத்தமாக நாட்டு மக்களின் பிரச்சினையாகவே காணப்படுகின்றதுஇந்த பிரச்சினையை ஒட்டுமொத்த இலங்கைவாழ் மக்களும் அந்நியச் செலாவனி வீழ்ச்சியடைவதை பார்த்துக்கொண்டிருக்காது அனைத்து மக்களும்  பாகுபாடின்றி  அனைவரும் கைகோர்த்துநின்று போராடி கடலை தாரைவார்த்துக் கொடுப்பதையும் எமது  அந்நியச் செலாவனி வீழ்ச்சியடைவதையும் மீட்டெடுக்க ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement