• Nov 17 2024

வீதிகளில் பயணிக்கும் பெண்களை பயமுறுத்தி கொள்ளை - இருவர் கைது..!!

Tamil nila / Mar 2nd 2024, 8:24 pm
image

வீதிகளில் பயணிக்கும் பெண்களை பயமுறுத்தி கொள்ளையிடல் மற்றும் திருடப்பட்ட  மோட்டார் சைக்களில் பயணித்து வாளை காட்டி அச்சுறுத்தி வீடுகளுக்குள் புகுந்து  கொள்ளையடித்து வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும், சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து 4300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.

கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வாள், இரண்டு கைப்பைகள், பெறுமதியான 05 கையடக்கத் தொலைபேசிகள், 02 அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

மஹரகம பொலிஸ் பிரிவில் வீதியில் பயணிக்கும் பெண்களின் கைப்பைகளை கொள்ளையடித்த 05 சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீகொடதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போதே இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாவ, ஹோமாகம, மஹரகம, மிரிஹான ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சந்தேகநபர்கள் பாரியளவிலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதிகளில் பயணிக்கும் பெண்களை பயமுறுத்தி கொள்ளை - இருவர் கைது. வீதிகளில் பயணிக்கும் பெண்களை பயமுறுத்தி கொள்ளையிடல் மற்றும் திருடப்பட்ட  மோட்டார் சைக்களில் பயணித்து வாளை காட்டி அச்சுறுத்தி வீடுகளுக்குள் புகுந்து  கொள்ளையடித்து வந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், சந்தேகநபர்கள் கைது செய்யப்படும் போது அவர்களிடம் இருந்து 4300 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதாக மஹரகம பொலிஸார் தெரிவித்தனர்.கொள்ளைக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிள், வாள், இரண்டு கைப்பைகள், பெறுமதியான 05 கையடக்கத் தொலைபேசிகள், 02 அடையாள அட்டைகள் உள்ளிட்ட பொருட்களை பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.மஹரகம பொலிஸ் பிரிவில் வீதியில் பயணிக்கும் பெண்களின் கைப்பைகளை கொள்ளையடித்த 05 சம்பவங்கள் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மீகொடதெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்த போதே இரண்டு சந்தேக நபர்களும் நேற்று (01) கைது செய்யப்பட்டுள்ளனர்.கொட்டாவ, ஹோமாகம, மஹரகம, மிரிஹான ஆகிய பொலிஸ் பிரிவுகளில் சந்தேகநபர்கள் பாரியளவிலான கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டுள்ளமை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement