• Feb 05 2025

நான்கு வலம்புரி சங்குகளை விற்க முயன்ற இருவர் கைது!

Chithra / Dec 8th 2024, 12:10 pm
image

புத்தளம் - மாதம்பே மற்றும் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் 4 வலம்புரி சங்குகளை விற்க முயன்ற சந்தேக நபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசங்களை சேர்ந்த 41 மற்றும் 42 வயதுடையவர்கள் ஆவர்.

இதன்படி மாதம்பை பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி மற்றும் பல வகையான மட்டிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து தடைசெய்யப்பட்ட வகையைச் சேர்ந்த மட்டிகளும், வலம்பரி சங்கு ஒன்றும், காணப்பட்டதாக இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து அவர் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  வலம்புரி சங்கு உட்பட மட்டிகள், மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக ஆனைவிழுந்தாவ வனவிலங்கு காரியாலய உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


நான்கு வலம்புரி சங்குகளை விற்க முயன்ற இருவர் கைது புத்தளம் - மாதம்பே மற்றும் வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரு வேறு பிரதேசங்களில் 4 வலம்புரி சங்குகளை விற்க முயன்ற சந்தேக நபர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மாதம்பே மற்றும் வென்னப்புவ பிரதேசங்களை சேர்ந்த 41 மற்றும் 42 வயதுடையவர்கள் ஆவர்.இதன்படி மாதம்பை பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த சுமார் 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான வலம்புரி மற்றும் பல வகையான மட்டிகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து தடைசெய்யப்பட்ட வகையைச் சேர்ந்த மட்டிகளும், வலம்பரி சங்கு ஒன்றும், காணப்பட்டதாக இந்த சுற்றிவளைப்பில் ஈடுபட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து அவர் பயணித்ததாக கூறப்படும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மற்றும் அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட  வலம்புரி சங்கு உட்பட மட்டிகள், மோட்டார் சைக்கிள் என்பன மேலதிக விசாரணைகளுக்காக ஆனைவிழுந்தாவ வனவிலங்கு காரியாலய உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement