• Feb 25 2025

கிளிநொச்சியில் 400.10 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் வாகனத்துடன் இருவர் கைது

Thansita / Feb 24th 2025, 10:58 pm
image

வடமராட்சி பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து  கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் உமையாள்புரம் பகுதியில் இடை மறிக்கப்பட்டு கூலர் வாகனத்தை சோதனையிடப்பட்டது.

இதன் போது 150 இற்கு மேற்பட்ட கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டது,

 இரண்டு சந்தேக நபர்களும் கஞ்சா பொதியை ஏற்றி வந்த கூலர்வானமும் கைது செய்யப்பட்டுள்ளது

350 கிலோவுக்கு மேற்பட்ட நிறையுடைய கஞ்சா, வாகனம் மற்றும் இரண்டு சந்தேக நபர்களும்  கிளிநொச்சி பொலிஸார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

கிளிநொச்சியில் 400.10 கிலோ கிராம் கேரள கஞ்சா மற்றும் வாகனத்துடன் இருவர் கைது வடமராட்சி பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பெருமளவு கேரள கஞ்சா பொதிகள் கிளிநொச்சி பரந்தன் பகுதியில் வைத்து  பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது, கிளிநொச்சி தர்மபுரம் ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.இன்று அதிகாலை வடமராட்சிப் பகுதியில் இருந்து  கூலர் ரக வாகனத்தில் பெருமளவு கேரள கஞ்சா கடத்தப்படுவதாக இராணுவ புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வாகனம் கிளிநொச்சி ஏ9 வீதி பரந்தன் உமையாள்புரம் பகுதியில் இடை மறிக்கப்பட்டு கூலர் வாகனத்தை சோதனையிடப்பட்டது.இதன் போது 150 இற்கு மேற்பட்ட கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டது, இரண்டு சந்தேக நபர்களும் கஞ்சா பொதியை ஏற்றி வந்த கூலர்வானமும் கைது செய்யப்பட்டுள்ளது350 கிலோவுக்கு மேற்பட்ட நிறையுடைய கஞ்சா, வாகனம் மற்றும் இரண்டு சந்தேக நபர்களும்  கிளிநொச்சி பொலிஸார் கட்டுப்பாட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Advertisement

Advertisement

Advertisement