• May 17 2024

தமிழர் பகுதியில் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர்! samugammedia

Chithra / May 7th 2023, 2:05 pm
image

Advertisement


மன்னார் - மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து  12 மில்லியன் ரூபா பெறுமதியான  ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு  சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றையும் மீட்டுள்ளனர்.

மன்னார் தள்ளாடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்க்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மன்னாரிலிருந்து சென்ற குறித்த  காரை பின் தொடர்ந்து சென்ற புலனாய்வுப் பிரிவினர் குஞ்சுக்குளம் அருகில் உள்ள விகும்புர பகுதியில் வாகனத்தை சோதனை செய்தனர்.

இதன் போது வாகனத்தினுள் நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் பெருமதி 12 மில்லியன் ரூபா என்று  தெரிவிக்கப்பட்டது.

கைது செய்யப்பட்டவர்கள்  கல்பிட்டியை சேர்ந்த (38) வயது மற்றும் மன்னார் அடம்பனைச் சேர்ந்த (27) வயதுடைய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.


கைப்பற்றப்பட்ட   ஐஸ் போதைப் பொருள் சந்தேக நபர்கள்  மற்றும் வாகனம் உட்பட சான்றுப் பொருட்கள் அனைத்தும்  மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழர் பகுதியில் 12 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் சிக்கிய இருவர் samugammedia மன்னார் - மதவாச்சி பிரதான வீதி குஞ்சுக்குளம் வீதியில் வைத்து  12 மில்லியன் ரூபா பெறுமதியான  ஐஸ் போதைப் பொருளுடன் இரண்டு  சந்தேக நபர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்கள் பயன்படுத்திய கார் ஒன்றையும் மீட்டுள்ளனர்.மன்னார் தள்ளாடி இராணுவப் புலனாய்வுப் பிரிவினர்க்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மன்னாரிலிருந்து சென்ற குறித்த  காரை பின் தொடர்ந்து சென்ற புலனாய்வுப் பிரிவினர் குஞ்சுக்குளம் அருகில் உள்ள விகும்புர பகுதியில் வாகனத்தை சோதனை செய்தனர்.இதன் போது வாகனத்தினுள் நூதனமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப் பொருளின் பெருமதி 12 மில்லியன் ரூபா என்று  தெரிவிக்கப்பட்டது.கைது செய்யப்பட்டவர்கள்  கல்பிட்டியை சேர்ந்த (38) வயது மற்றும் மன்னார் அடம்பனைச் சேர்ந்த (27) வயதுடைய நபர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது.கைப்பற்றப்பட்ட   ஐஸ் போதைப் பொருள் சந்தேக நபர்கள்  மற்றும் வாகனம் உட்பட சான்றுப் பொருட்கள் அனைத்தும்  மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement