• Nov 17 2024

மின்சார வேலியில் சிக்குண்ட இரண்டு கொம்பன் யானை உயிரிழப்பு! samugammedia

Tamil nila / Dec 3rd 2023, 4:37 pm
image

புத்தளம் கருவலகஸ்வெ பகுதியில் இரண்டு கொம்பன் யானைகள் அதிவலுக் கொண்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

புத்தளம் கருவலகஸ்வெவ தேவனுவர பகுதியில் மின்சார வேலியில் சிக்கூண்ட நிலையில் இரண்டு கொம்பன் யானைகளின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

குறித்த கொம்பன் யானைகள் இரண்டும் நபரொருவரின் காணியிலேயே உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாசல என்று அழைக்கபடுகின்ற கொம்பன் யானை இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் வலகம்பா என்று அழைக்கப்படுகின்ற கொம்பன் யானை ஒரு வாரத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

அதிக வலுக் கொண்ட மின்சார வேலியைப் பொருத்தியமையினாலே குறித்த கொம்பன் யானைகள் இரண்டும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதன்போது காணியின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கருவலகஸ்வெவ பொலிஸார் மற்றும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

குறித்த யானைகள் இரண்டிற்கும் நிக்காவெரெட்டிய மிருக வைத்தியர் டொக்டர் இசுருவினால் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்மள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

மின்சார வேலியில் சிக்குண்ட இரண்டு கொம்பன் யானை உயிரிழப்பு samugammedia புத்தளம் கருவலகஸ்வெ பகுதியில் இரண்டு கொம்பன் யானைகள் அதிவலுக் கொண்ட மின்சார வேலியில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.புத்தளம் கருவலகஸ்வெவ தேவனுவர பகுதியில் மின்சார வேலியில் சிக்கூண்ட நிலையில் இரண்டு கொம்பன் யானைகளின் சடலம் இன்று மீட்கப்பட்டுள்ளதாக கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.குறித்த கொம்பன் யானைகள் இரண்டும் நபரொருவரின் காணியிலேயே உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.வாசல என்று அழைக்கபடுகின்ற கொம்பன் யானை இன்று அதிகாலை உயிரிழந்துள்ளதாகவும் வலகம்பா என்று அழைக்கப்படுகின்ற கொம்பன் யானை ஒரு வாரத்திற்கு முன்பு உயிரிழந்துள்ளதாகவும் வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.அதிக வலுக் கொண்ட மின்சார வேலியைப் பொருத்தியமையினாலே குறித்த கொம்பன் யானைகள் இரண்டும் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்தனர்.இதன்போது காணியின் உரிமையாளர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கருவலகஸ்வெவ பொலிஸார் மற்றும் கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.குறித்த யானைகள் இரண்டிற்கும் நிக்காவெரெட்டிய மிருக வைத்தியர் டொக்டர் இசுருவினால் உடற்கூறு பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளதாக வனஜீவராசிகள் திணைக்மள அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

Advertisement

Advertisement

Advertisement