• Jan 13 2025

தேயிலை மலையில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்பு

Chithra / Dec 24th 2024, 3:20 pm
image


நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (24) காலை பத்து மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த தேயிலை மலையில் ஆண் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது, தேயிலை மலையின் அடிவாரத்தில் இரண்டு குட்டிகள் இருப்பதை கண்டு தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.

இந்த இரண்டு குட்டிகள் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து, இந்த இரண்டு குட்டிகளும் சிறுத்தையின் குட்டிகள் என உறுதிசெய்யப்பட்டது.

எனவே இரண்டு குட்டிகளையும் நேற்று இரவு தாய் சிறுத்தை ஈன்றெடுத்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்ததோடு மீட்ட இரண்டு சிறுத்தை குட்டிகளையும் அதே இடத்தில் வைக்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் குறித்த தேயிலை மலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அறிவித்ததாக தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

இரண்டு குட்டிகளும் காணப்பட்ட பகுதியில் பாரிய சிறுத்தை புலி ஒன்று அழைந்து திரிவதாகவும் அந்த பகுதிக்கு சென்று தொழில் புரிய முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.

எனவே இது தொடர்பாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தேயிலை மலையில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்பு நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நோர்வூட் சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தேயிலை மலையின் அடிவாரத்தில் இருந்து இரண்டு சிறுத்தை குட்டிகள் மீட்கப்பட்டதாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்த சம்பவம் இன்று (24) காலை பத்து மணியளவில் இடம் பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த தேயிலை மலையில் ஆண் தொழிலாளர்கள் பணிபுரிந்து கொண்டிருந்த போது, தேயிலை மலையின் அடிவாரத்தில் இரண்டு குட்டிகள் இருப்பதை கண்டு தோட்ட நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.இந்த இரண்டு குட்டிகள் தொடர்பாக நோர்வூட் பொலிஸார் வனவிலங்கு அதிகாரிகளுக்கு அறிவித்ததை தொடர்ந்து, இந்த இரண்டு குட்டிகளும் சிறுத்தையின் குட்டிகள் என உறுதிசெய்யப்பட்டது.எனவே இரண்டு குட்டிகளையும் நேற்று இரவு தாய் சிறுத்தை ஈன்றெடுத்திருக்கலாம் என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்ததோடு மீட்ட இரண்டு சிறுத்தை குட்டிகளையும் அதே இடத்தில் வைக்குமாறு வனவிலங்கு அதிகாரிகள் குறித்த தேயிலை மலையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அறிவித்ததாக தொழிலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இரண்டு குட்டிகளும் காணப்பட்ட பகுதியில் பாரிய சிறுத்தை புலி ஒன்று அழைந்து திரிவதாகவும் அந்த பகுதிக்கு சென்று தொழில் புரிய முடியாத சூழ்நிலை காணப்படுவதாகவும் தொழிலாளர்கள் சுட்டி காட்டுகின்றனர்.எனவே இது தொடர்பாக நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்ஜோன்டிலரி மேல்பிரிவு தோட்ட தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement