• Apr 13 2025

மயக்கமருந்து தெளித்து நகைகள் கொள்ளை - யாழில் வீட்டிற்குள் நுழைந்த இருவரால் பரபரப்பு

Chithra / Jan 28th 2025, 11:50 am
image



சூரிய மின்கலம் (சோலார்) திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி, வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை சென்ற இருவர்,வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத்தினை பழுது பார்க்க வந்துள்ளதாக கூறி பாசாங்கு செய்து, 

வீட்டில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்தினை தெளித்து, அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  

இந்நிலையில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

மயக்கமருந்து தெளித்து நகைகள் கொள்ளை - யாழில் வீட்டிற்குள் நுழைந்த இருவரால் பரபரப்பு சூரிய மின்கலம் (சோலார்) திருத்த வேலைக்கு வந்தவர்கள் என கூறி, வீட்டில் இருந்தவர்களுக்கு மயக்க மருத்து தெளித்து சுமார் 12 பவுன் நகையை கொள்ளையடித்து சென்ற சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.யாழ்ப்பாணம் - சுன்னாகம் பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த வீட்டிற்கு நேற்று திங்கட்கிழமை சென்ற இருவர்,வீட்டில் பொருத்தப்பட்டுள்ள சூரிய மின்கலத்தினை பழுது பார்க்க வந்துள்ளதாக கூறி பாசாங்கு செய்து, வீட்டில் இருந்தவர்கள் மீது மயக்க மருந்தினை தெளித்து, அவர்கள் அணிந்திருந்த நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள், சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.  இந்நிலையில் சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement