• Nov 25 2024

முல்லைத்தீவில் கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது..!samugammedia

mathuri / Jan 16th 2024, 6:47 am
image

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதை பொருட்களை வியாபாரம் செய்து வந்ததாக மக்களால் பொலிசாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது. 

குறிப்பாக குறித்த கிராம அலுவலர் கெரோயின் ஐஸ்  உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை பல இளைஞர்கள் ஊடாக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து வருவதோடு அவரும் குறித்த போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக  இருந்ததை அறிந்த மக்கள் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்

இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களது வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய  அதிகாரிகள் பல நாட்களாக தொடர்ச்சியாக முயற்சி செய்து நேற்றைய தினம் (15) குறித்த கிராம அலுவலர் மற்றும் இவருடன் இணைந்து குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்

இவர்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட போது குறித்த நபர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தமை அறியப்பட்டிருக்கின்ற நிலைமையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்

இதேவேளை, சந்தேக த்த நபர்களை இன்றைய தினம்(16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

முல்லைத்தீவில் கிராம அலுவலர் உள்ளிட்ட இருவர் கைது.samugammedia முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடமையாற்றி வருகின்ற கிராம அலுவலர் ஒருவர் உள்ளிட்ட இரண்டு நபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என புதுக்குடியிருப்பு பொலிசாரால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளனர்முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவில் கடமையாற்றுகின்ற குறித்த கிராம அலுவலர்  தொடர்ச்சியாக பல்வேறு தரப்பினர்களுக்கும் போதை பொருட்களை வியாபாரம் செய்து வந்ததாக மக்களால் பொலிசாருக்கு இரகசிய தகவல் வழங்கப்பட்டது. குறிப்பாக குறித்த கிராம அலுவலர் கெரோயின் ஐஸ்  உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்களை பல இளைஞர்கள் ஊடாக பல்வேறு தரப்பினருக்கும் விற்பனை செய்து வருவதோடு அவரும் குறித்த போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக  இருந்ததை அறிந்த மக்கள் புதுக்குடியிருப்பு பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்இந்நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களது வழிகாட்டலில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய  அதிகாரிகள் பல நாட்களாக தொடர்ச்சியாக முயற்சி செய்து நேற்றைய தினம் (15) குறித்த கிராம அலுவலர் மற்றும் இவருடன் இணைந்து குறித்த செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மேலும் ஒருவரையும் கைது செய்துள்ளனர்இவர்களை முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்ட போது குறித்த நபர்கள் போதை பொருளுக்கு அடிமையாகியிருந்தமை அறியப்பட்டிருக்கின்ற நிலைமையில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்இதேவேளை, சந்தேக த்த நபர்களை இன்றைய தினம்(16) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement