வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் 70Kg கஞ்சாவுடன் நேற்றைய தினம்(05) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வெற்றிலைக்கேணி கடற்படை கட்டளை அதிகாரி B.G .தம்மிக்க தலைமையில் கடற்படை நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகை சோதனை செய்ய முற்பட்டவேளை படகு தப்பிக்க முயன்றது.
இதனையடுத்து, தப்பிச் சென்ற படகை கடற்படையினர் இடைவிடாது துரத்திச் சென்றவேளை மணற்காடு கடற்பகுதியில் வைத்து 70 Kg போதைப் பொருளுடன் படகில் பயணித்த கட்டைக்காட்டை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்
கைது செய்யப்பட்ட இருவரும் கடற்படை முகாம் அழைத்துவரப்பட்டு நீண்ட விசாரணைகளின் பின்னர் மருதங்கேணி பொலிசாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கட்டைக்காடு கடற்பகுதியில் இருவர் கடற்படையினரால் கைது. வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்ட இருவர் 70Kg கஞ்சாவுடன் நேற்றைய தினம்(05) கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வெற்றிலைக்கேணி கடற்படை கட்டளை அதிகாரி B.G .தம்மிக்க தலைமையில் கடற்படை நேற்று காலை கட்டைக்காடு கடற்பகுதியில் சந்தேகத்துக்கிடமான முறையில் பயணித்த படகை சோதனை செய்ய முற்பட்டவேளை படகு தப்பிக்க முயன்றது.இதனையடுத்து, தப்பிச் சென்ற படகை கடற்படையினர் இடைவிடாது துரத்திச் சென்றவேளை மணற்காடு கடற்பகுதியில் வைத்து 70 Kg போதைப் பொருளுடன் படகில் பயணித்த கட்டைக்காட்டை சேர்ந்த இருவரும் கைது செய்யப்பட்டனர்கைது செய்யப்பட்ட இருவரும் கடற்படை முகாம் அழைத்துவரப்பட்டு நீண்ட விசாரணைகளின் பின்னர் மருதங்கேணி பொலிசாரிடம் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.