• Mar 13 2025

பேருந்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் விபத்து - இரு இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி

Chithra / Mar 12th 2025, 3:03 pm
image



புதுக்குடியிருப்பில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கப்ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தினை முந்தி செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 


பேருந்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் விபத்து - இரு இளைஞர்களுக்கு ஏற்பட்ட கதி புதுக்குடியிருப்பில் பேருந்தை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் ஒன்று கப்ரக வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று பிற்பகல் 12.30 மணியளவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவுள்ள பேருந்து தரிப்பிடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தினை முந்தி செல்ல முற்பட்டபோது எதிரே வந்த மகேந்திரா கப்ரக வாகனத்துடன் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் காயங்களுக்குள்ளாகிய நிலையில் புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.விபத்து சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement