• May 19 2024

கல்முனையில் துவிச்சக்கர வண்டி மெல்லோட்ட நிகழ்வு!

Sharmi / Jan 12th 2023, 11:21 pm
image

Advertisement

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையினை தளமாக கொண்டு 1982ல் ஆரம்பிக்கப்பட்ட கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் மலர்ந்திருக்கும் 2023ல் 40வது ஆண்டு நிறைவு  கொண்டாட்ட  தொடர் நிகழ்வு இன்று(12)  கல்முனை நகர் ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

2023 ஆம் ஆண்டு முழுவதும் கட்டம் கட்டமாக நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள இவ் நிகழ்வுகளை சம்பிராதய பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக இன்று விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட இலச்சினை பதிக்கப்பட்ட டீ சேட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந் நிகழ்வினை தொடர்ந்து 'நோய் அற்ற வாழ்வே குறையற்ற செல்வம்' எனும் தொனிப்பொருளை உயிர்பிக்கும் வகையில் (வெளியிடப்படும் டீ சேட் அணிந்துகொண்டு) துவிச்சக்கர வண்டி மெல்லொட்ட நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகரும்  தற்போதைய தவிசாளருமான Bester  ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ. எம். றகீப், கௌரவ அதிதியாக கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகர்த்த வைத்தியசாலை குழுமத்தின் தவிசாளர் டாக்டர் ஜெமீல் முகம்மட் றிஸான், கல்முனை தலைமையக பொலிஸ்  பரீசோதகர் எம்.ரம்ஷீன் பக்கீர், கல்முனை  பொலிஸ் நிலைய சமூக  பொலிஸ் பிரிவு  பொறுப்பதிகாரி , பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. எல் ஏ. வாஹிட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கல்முனை நகர் ஐக்கிய சதுக்கத்தில்  விக்டோறியஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்ற  இந்நிகழ்வானது  கழகத்தின் தலைவர் ஏ. டவுளுயு. எம். ஜெஸ்மி அவர்களின் ஒருங்கிணைப்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியளாளர் அப்துல் ஐப்பார்  சமீம்    நெறிப்படுத்தலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

கல்முனையில் துவிச்சக்கர வண்டி மெல்லோட்ட நிகழ்வு கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையினை தளமாக கொண்டு 1982ல் ஆரம்பிக்கப்பட்ட கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகம் மலர்ந்திருக்கும் 2023ல் 40வது ஆண்டு நிறைவு  கொண்டாட்ட  தொடர் நிகழ்வு இன்று(12)  கல்முனை நகர் ஐக்கிய சதுக்கத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.2023 ஆம் ஆண்டு முழுவதும் கட்டம் கட்டமாக நடைபெற உத்தேசிக்கப்பட்டுள்ள இவ் நிகழ்வுகளை சம்பிராதய பூர்வமாக ஆரம்பித்து வைக்கும் முகமாக இன்று விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் 40வது ஆண்டு நிறைவு கொண்டாட்ட இலச்சினை பதிக்கப்பட்ட டீ சேட்டுகள் காட்சிப்படுத்தப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.இந் நிகழ்வினை தொடர்ந்து 'நோய் அற்ற வாழ்வே குறையற்ற செல்வம்' எனும் தொனிப்பொருளை உயிர்பிக்கும் வகையில் (வெளியிடப்படும் டீ சேட் அணிந்துகொண்டு) துவிச்சக்கர வண்டி மெல்லொட்ட நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்வில் கல்முனை விக்டோறியஸ் விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகரும்  தற்போதைய தவிசாளருமான Bester  ஏ.எம்.றியாஸ் தலைமையில் நடைபெற்றதுடன் இவ் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ. எம். றகீப், கௌரவ அதிதியாக கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகர்த்த வைத்தியசாலை குழுமத்தின் தவிசாளர் டாக்டர் ஜெமீல் முகம்மட் றிஸான், கல்முனை தலைமையக பொலிஸ்  பரீசோதகர் எம்.ரம்ஷீன் பக்கீர், கல்முனை  பொலிஸ் நிலைய சமூக  பொலிஸ் பிரிவு  பொறுப்பதிகாரி , பிரதான பொலிஸ் பரிசோதகர் ஏ. எல் ஏ. வாஹிட் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கல்முனை நகர் ஐக்கிய சதுக்கத்தில்  விக்டோறியஸ் விளையாட்டுக் கழக உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் நடைபெற்ற  இந்நிகழ்வானது  கழகத்தின் தலைவர் ஏ. டவுளுயு. எம். ஜெஸ்மி அவர்களின் ஒருங்கிணைப்பில் கழகத்தின் பொதுச் செயலாளர் சிரேஷ்ட ஊடகவியளாளர் அப்துல் ஐப்பார்  சமீம்    நெறிப்படுத்தலில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Advertisement

Advertisement

Advertisement