• May 29 2025

வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு பெண்கள் கைது!

Chithra / May 26th 2025, 1:39 pm
image

 

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரண்டு பெண்கள்  விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை மற்றும் ஹுனுமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 47 வயதுடைய இரண்டு பெண்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களான இரண்டு பெண்களும் நேற்றைய தினம் அதிகாலை வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு பெண்களும் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 58,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 290 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.


வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்காவில் தரையிறங்கிய இரண்டு பெண்கள் கைது  கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று இரண்டு பெண்கள்  விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால்கைது செய்யப்பட்டுள்ளனர்.சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கம்பளை மற்றும் ஹுனுமுல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 30 மற்றும் 47 வயதுடைய இரண்டு பெண்களே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.சந்தேக நபர்களான இரண்டு பெண்களும் நேற்றைய தினம் அதிகாலை வெளிநாட்டிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.இதன்போது, விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இரண்டு பெண்களும் கொண்டு வந்த பயணப்பொதிகளிலிருந்து 58,000 வெளிநாட்டு சிகரட்டுகள் அடங்கிய 290 சிகரட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement