• Jan 15 2025

சாவகச்சேரி நகரப் பகுதியில் இரு இளைஞர்கள் கைது..!

Sharmi / Jan 13th 2025, 1:32 pm
image

சாவகச்சேரி நகரப் பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ், உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினரால் இன்றையதினம்(13) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம்-சாவகச்சேரிக்கு வருகை தந்த 20 மற்றும் 24 வயதுடைய இருவர் அங்கு நின்று கொண்டிருந்தபோது சாவகச்சேரி பொலிஸார் அவர்கள் இருவரையும் சோதனையிட்டபோது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. 

இந்நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


சாவகச்சேரி நகரப் பகுதியில் இரு இளைஞர்கள் கைது. சாவகச்சேரி நகரப் பகுதியில் 200 போதை மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சாவகச்சேரி பொலிஸ் பொறுப்பதிகாரியின் வழிகாட்டலின் கீழ், உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினரால் இன்றையதினம்(13) இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.போதை மாத்திரைகளை விற்பனை செய்வதற்காக கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணம்-சாவகச்சேரிக்கு வருகை தந்த 20 மற்றும் 24 வயதுடைய இருவர் அங்கு நின்று கொண்டிருந்தபோது சாவகச்சேரி பொலிஸார் அவர்கள் இருவரையும் சோதனையிட்டபோது அவர்களிடம் போதை மாத்திரைகள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களை சாவகச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement