• Dec 14 2024

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் - பிரதமர் ஹரிணி இடையில் சந்திப்பு!

Tamil nila / Nov 29th 2024, 7:30 pm
image

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.

இச்சந்திப்பின் போது, ​​ஜனநாயகக் கொள்கைகளுக்கான மக்களின் வலுவான அர்ப்பணிப்பை தூதுவர் பாராட்டினார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சேவையாற்றும் திறமையான மற்றும் நிபுணத்துவமிக்க இலங்கையர்களின் சேவையைப் பாராட்டுவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.


தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ரஷீத் அலி அல் மஸ்ரூயி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிரிவின் மேலதிக செயலாளர் யசோஜா கே.குணசேகர ஆகியோர் கலந்துகொண்டு பங்கேற்றனர்.


ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதுவர் - பிரதமர் ஹரிணி இடையில் சந்திப்பு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் இலங்கைக்கான ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவர் காலித் நாஸீர் அல் அமேரி ஆகியோருக்கு இடையில் பிரதமர் அலுவலகத்தில் சந்திப்பொன்று இடம்பெற்றது.இச்சந்திப்பின் போது, ​​ஜனநாயகக் கொள்கைகளுக்கான மக்களின் வலுவான அர்ப்பணிப்பை தூதுவர் பாராட்டினார். ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவைப் பற்றி பெருமிதம் கொள்வதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் சேவையாற்றும் திறமையான மற்றும் நிபுணத்துவமிக்க இலங்கையர்களின் சேவையைப் பாராட்டுவதாகவும் தூதுவர் தெரிவித்தார்.தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் ரஷீத் அலி அல் மஸ்ரூயி, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் மஹிந்த குணரத்ன மற்றும் வெளிவிவகார அமைச்சின் மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க பிரிவின் மேலதிக செயலாளர் யசோஜா கே.குணசேகர ஆகியோர் கலந்துகொண்டு பங்கேற்றனர்.

Advertisement

Advertisement

Advertisement