• Nov 22 2024

தாக்குதல்தாரிகளின் தந்தை இப்ராஹிமை பாதுகாக்க அரசு முயற்சி - உதய கம்மன்பில குற்றச்சாட்டு

Chithra / Oct 31st 2024, 8:56 am
image

  

இப்ராஹிமை பாதுகாப்பதற்காக ரவி, சானி தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.

புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகைளை மேற்கொண்ட அல்விஸ் மற்றும் இமாம் குழு அறிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. 

இவ்விரு அறிக்கைகளையும் புறக்கணிப்பதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் அடிப்படையற்றதுடன், சிறுபிள்ளைத்தனமானது.

ஊடக சந்திப்பை நடத்தி அறிக்கைகளை புறக்கணிப்பதாக குறிப்பிடாமல் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சென்று புறக்கணிப்பதற்கான காரணத்தை அரசாங்கம் ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டும்.

குண்டுத்தாக்குதலின் பிரதான குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன, சானி அபேசேகர ஆகியோரை வைத்துக் கொண்டு எவ்வாறு சிறந்த மற்றும் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க முடியும். 

குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட இரண்டு தாக்குதல்தாரிகளின் தந்தையான மொஹமட் இம்ராஹிமை பாதுகாப்பதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர தலைமையில் முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. 

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.- என்றார்.

தாக்குதல்தாரிகளின் தந்தை இப்ராஹிமை பாதுகாக்க அரசு முயற்சி - உதய கம்மன்பில குற்றச்சாட்டு   இப்ராஹிமை பாதுகாப்பதற்காக ரவி, சானி தலைமையில் விசாரணைகளை முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது என பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.புறக்கோட்டை பகுதியில் உள்ள பிவிதுரு ஹெல உறுமய கட்சி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணைகைளை மேற்கொண்ட அல்விஸ் மற்றும் இமாம் குழு அறிக்கைகளை அரசாங்கம் நிராகரித்துள்ளது. இவ்விரு அறிக்கைகளையும் புறக்கணிப்பதற்கு அரசாங்கம் குறிப்பிடும் காரணிகள் அடிப்படையற்றதுடன், சிறுபிள்ளைத்தனமானது.ஊடக சந்திப்பை நடத்தி அறிக்கைகளை புறக்கணிப்பதாக குறிப்பிடாமல் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு சென்று புறக்கணிப்பதற்கான காரணத்தை அரசாங்கம் ஆதாரபூர்வமாக முன்வைக்க வேண்டும்.குண்டுத்தாக்குதலின் பிரதான குற்றவாளிகளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ரவி செனவிரத்ன, சானி அபேசேகர ஆகியோரை வைத்துக் கொண்டு எவ்வாறு சிறந்த மற்றும் சுயாதீனமான விசாரணைகளை முன்னெடுக்க முடியும். குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட இரண்டு தாக்குதல்தாரிகளின் தந்தையான மொஹமட் இம்ராஹிமை பாதுகாப்பதற்காகவே குண்டுத்தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை ரவி செனவிரத்ன மற்றும் சானி அபேசேகர தலைமையில் முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாடுகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள்.- என்றார்.

Advertisement

Advertisement

Advertisement