• Feb 05 2025

ஊழல் முறைகேடு: உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேனவிற்கு அமெரிக்கா பயணத்தடை!

Chithra / Dec 10th 2024, 9:27 am
image

 

ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும், ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

 ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது.

ஊழலிற்கு எதிரான சர்வதேச தினம் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, உலகில் ஊழல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது.

ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேன பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றியவேளை இலங்கை, எயர்பஸ்ஸினை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்காக, இவர் இலஞ்சம் பெற்றார் என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்து அவரை குறிப்பிட்ட பட்டியலில் இணைத்துள்ளதுடன், இவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டு அவர்களிற்கு எதிராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, ஊழல் நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுத்து அதனால் நன்மையடைந்தார் என்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிற்கும் பயணத்தடை விதித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

ஊழல் முறைகேடு: உதயங்க வீரதுங்க மற்றும் கபில சந்திரசேனவிற்கு அமெரிக்கா பயணத்தடை  ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவும், ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேனவும், அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்டனர் என தெரிவித்துள்ள அமெரிக்க இராஜாங்க திணைக்களம் இவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு பயணத்தடை விதித்துள்ளது.ஊழலிற்கு எதிரான சர்வதேச தினம் மற்றும் சர்வதேச மனித உரிமை தினத்தை முன்னிட்டு, உலகில் ஊழல் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டவர்களை பொறுப்புக்கூறலிற்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா எடுத்துள்ளது.ஸ்ரீலங்கன் எயர்லைன்சின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபிலசந்திரசேன பிரதம நிறைவேற்றதிகாரியாக பணியாற்றியவேளை இலங்கை, எயர்பஸ்ஸினை அதிக விலைக்கு கொள்வனவு செய்வதை உறுதி செய்வதற்காக, இவர் இலஞ்சம் பெற்றார் என அமெரிக்கா பகிரங்கமாக அறிவித்து அவரை குறிப்பிட்ட பட்டியலில் இணைத்துள்ளதுடன், இவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இந்த பட்டியலில் இணைக்கப்பட்டு அவர்களிற்கு எதிராகவும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.அத்துடன் ரஸ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க, இலங்கைக்கு மிக் விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்டபோது, ஊழல் நடவடிக்கையை திட்டமிட்டு முன்னெடுத்து அதனால் நன்மையடைந்தார் என்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களிற்கும் பயணத்தடை விதித்துள்ளதாக அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement