• May 10 2024

ரஷ்யாவின் 6 போா் விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன் படைகள்...!

Sharmi / Apr 6th 2024, 12:35 pm
image

Advertisement

ரஷ்யாவின் 6 போா் விமானங்களை  தாக்கி அழித்துள்ளதாக  உக்ரைன் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

உக்ரைன்- ரஷ்யா போர் நடவடிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து வந்த 6 போர் விமானங்களை ட்ரோன்கள் மூலம்  தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.

உக்ரைனின் எல்லைப் பிராந்தியமான ரோஸ்தொவில் அமைந்துள்ள மொரொஸோவ்ஸ்க் விமானதளத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் மேலும் 8 விமானங்கள் கணிசமாக சேதமடைந்ததாகவும்  ராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்தத் தாக்குதலில் ரஷியப் படையினா் கொல்லப்பட்டிருப்பதற்கோ, காயமடைந்திருப்பதற்கோ வாய்ப்புள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறினா்.

மொரொஸோவ்ஸ்க் விமான தளத்தில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்படும் எஸ்யு-27 மற்றும் எஸ்யு-34 ரக விமானங்களை ரஷியா நிறுத்திவைத்துள்ளது.

எனினும், விமானங்கள் அழிக்கப்பட்ட தகவலை ரஷியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், ரோஸ்தொவ் பிராந்தியத்தைக் குறிவைத்து 40 ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் 6 போா் விமானங்களை தாக்கி அழித்த உக்ரைன் படைகள். ரஷ்யாவின் 6 போா் விமானங்களை  தாக்கி அழித்துள்ளதாக  உக்ரைன் அறிவித்துள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,உக்ரைன்- ரஷ்யா போர் நடவடிக்கை நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், ரஷ்யாவிலிருந்து வந்த 6 போர் விமானங்களை ட்ரோன்கள் மூலம்  தாக்கி அழித்ததாக உக்ரைன் தெரிவித்துள்ளது.உக்ரைனின் எல்லைப் பிராந்தியமான ரோஸ்தொவில் அமைந்துள்ள மொரொஸோவ்ஸ்க் விமானதளத்தில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதில் மேலும் 8 விமானங்கள் கணிசமாக சேதமடைந்ததாகவும்  இராணுவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.இந்தத் தாக்குதலில் ரஷியப் படையினா் கொல்லப்பட்டிருப்பதற்கோ, காயமடைந்திருப்பதற்கோ வாய்ப்புள்ளதாகவும் உக்ரைன் அதிகாரிகள் கூறினா்.மொரொஸோவ்ஸ்க் விமான தளத்தில் உக்ரைன் மீது தாக்குதல் நடத்துவதற்காக பயன்படுத்தப்படும் எஸ்யு-27 மற்றும் எஸ்யு-34 ரக விமானங்களை ரஷியா நிறுத்திவைத்துள்ளது.எனினும், விமானங்கள் அழிக்கப்பட்ட தகவலை ரஷியா இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இருந்தாலும், ரோஸ்தொவ் பிராந்தியத்தைக் குறிவைத்து 40 ட்ரோன்களை உக்ரைன் ஏவியதாக ரஷியா தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement