ராக்கைன் மாநிலத்தில் மியன்மார் ராணுவத்துக்கும் எ எ படையினருக்கும் இடையே சண்டை தொடர்கிறது.
மியன்மார் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களால் அந்நாட்டின் ராக்கைன் மாநிலத்தில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக அண்மையில் செய்தி வெளியானது.அதற்கு எதிராக ஐக்கிய நாட்டுச் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழக்கிழமையன்று கண்டனம் தெரிவித்தார்.
மியன்மாரின் சிறுபான்மை இனத்தவரைக் கொண்ட அரக்கான் ராணுவம் எனும் ஆயுதம் ஏந்திய படை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராக்கைனில் ராணுவப் படைகள் மீது தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு முதல் நடப்பில் இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அதுவரை, 2021ஆம் ஆண்டு மியன்மார் ராணுவம் வலுக்கட்டாயமாக ஆட்சியை மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து பூசல் அதிகம் இல்லாதிருந்தது.
“பொதுமக்கள் பலரைப் பலிவாங்கிய மியன்மார் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்,” என்று குட்டெரெசின் பேச்சாளர் ஸ்டெஃபனி டுஜாரிச் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.ராக்கைனைச் சேர்ந்த மக்கள் கூடுதல் சுய ஆட்சி உரிமை பெறப் போராடி வருவதாக எஎ படை சொல்கிறது. ராக்கைன், சுமார் 600,000 சிறுபான்மை ரொஹிங்யா சமூகத்தினர் வசிக்கும் வட்டாரமும் ஆகும்.
ராக்கைன் தலைநகர் சிட்வெக்கு வடக்கே இருக்கும் பியாய்ன் ஃபியு கிராமத்தில் ராணுவப் படைகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்களில் 70க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக எஎ இந்த வாரம் தெரிவித்தது. இச்செய்தியை பிரசாரத் தகவலாக ராணுவம் வகைப்படுத்தியது.ராக்கைன் மாநிலம் முழுவதும் தொலைபேசி, இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதனால் வன்முறை நிகழ்ந்ததாக வெளியாகும் செய்திகளை உறுதிப்படுத்துவது சிரமமாக இருந்து வருகிறது.
மியன்மாரில் ராணுவத்துக்கும் எஎ படையினருக்கும் இடையே தொடரும் பூசலில் ரொஹிங்யா சமூகத்தினர் சிக்கியுள்ளனர். ரொஹிங்யா மக்கள் தொடர்ந்து தவறாக நடத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருமாறு திரு குட்டெரெஸ் குரல் கொடுத்தார்.
பொதுமக்கள் மீது மியன்மார் ராணுவம் தாக்குதல் - ஐ.நா சபைத் தலைவர் கடும் கண்டனம் ராக்கைன் மாநிலத்தில் மியன்மார் ராணுவத்துக்கும் எ எ படையினருக்கும் இடையே சண்டை தொடர்கிறது.மியன்மார் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களால் அந்நாட்டின் ராக்கைன் மாநிலத்தில் பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டதாக அண்மையில் செய்தி வெளியானது.அதற்கு எதிராக ஐக்கிய நாட்டுச் சபையின் தலைவர் அன்டோனியோ குட்டெரெஸ் வியாழக்கிழமையன்று கண்டனம் தெரிவித்தார்.மியன்மாரின் சிறுபான்மை இனத்தவரைக் கொண்ட அரக்கான் ராணுவம் எனும் ஆயுதம் ஏந்திய படை 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராக்கைனில் ராணுவப் படைகள் மீது தாக்குதல் நடத்தியது. அதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டு முதல் நடப்பில் இருந்த போர் நிறுத்தம் முடிவுக்கு வந்தது. அதுவரை, 2021ஆம் ஆண்டு மியன்மார் ராணுவம் வலுக்கட்டாயமாக ஆட்சியை மீண்டும் கைப்பற்றியதைத் தொடர்ந்து பூசல் அதிகம் இல்லாதிருந்தது.“பொதுமக்கள் பலரைப் பலிவாங்கிய மியன்மார் ராணுவம் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு எதிராக குட்டெரெஸ் கடும் கண்டனம் தெரிவிக்கிறார்,” என்று குட்டெரெசின் பேச்சாளர் ஸ்டெஃபனி டுஜாரிச் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.ராக்கைனைச் சேர்ந்த மக்கள் கூடுதல் சுய ஆட்சி உரிமை பெறப் போராடி வருவதாக எஎ படை சொல்கிறது. ராக்கைன், சுமார் 600,000 சிறுபான்மை ரொஹிங்யா சமூகத்தினர் வசிக்கும் வட்டாரமும் ஆகும்.ராக்கைன் தலைநகர் சிட்வெக்கு வடக்கே இருக்கும் பியாய்ன் ஃபியு கிராமத்தில் ராணுவப் படைகள் நடத்திய தாக்குதல்களில் பொதுமக்களில் 70க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக எஎ இந்த வாரம் தெரிவித்தது. இச்செய்தியை பிரசாரத் தகவலாக ராணுவம் வகைப்படுத்தியது.ராக்கைன் மாநிலம் முழுவதும் தொலைபேசி, இணையத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. அதனால் வன்முறை நிகழ்ந்ததாக வெளியாகும் செய்திகளை உறுதிப்படுத்துவது சிரமமாக இருந்து வருகிறது.மியன்மாரில் ராணுவத்துக்கும் எஎ படையினருக்கும் இடையே தொடரும் பூசலில் ரொஹிங்யா சமூகத்தினர் சிக்கியுள்ளனர். ரொஹிங்யா மக்கள் தொடர்ந்து தவறாக நடத்தப்படுவதை முடிவுக்குக் கொண்டுவருமாறு திரு குட்டெரெஸ் குரல் கொடுத்தார்.