• Jun 26 2024

பொறுப்பேற்கப்படாத வாகன இலக்கத் தகடுகள் - யாழ் மாவட்ட செயலகம் விடுத்துள்ள அவசர அறிவிப்பு!samugammedia

Tamil nila / Sep 13th 2023, 2:58 pm
image

Advertisement

மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற வாகன இலக்கத்தகடுகளில், வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் கொழும்புக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக யாழ் மாவட்ட செயலகம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.

மோட்டார்வாகன போக்குவரத்து தலைமை அலுவலகத்திலிருந்து 2023.01.01 ஆந் திகதி முதல் 2023.06.30 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற வாகன இலக்கத்தகடுகளில், வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் 2023 ஒக்ரோபர் மாதம் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன.

மேற்படி வாகன இலக்கத்தகடுகளை, வாகன உரிமையாளர்கள் வாகனப்பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட்டை, பழைய வாகன இலக்கத்தகடுகள் மற்றும் வாகன இலக்கம் பொறித்த ஒட்டும் தாள் என்பவற்றை, 2023.09.30 ஆந் திகதிக்கு முன்னர் யாழ் மாவட்ட மோட்டார்வாகன போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்குரிய இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

மேற்படி வாகன இலக்கத்தகடுகளின் பட்டியல் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.


பொறுப்பேற்கப்படாத வாகன இலக்கத் தகடுகள் - யாழ் மாவட்ட செயலகம் விடுத்துள்ள அவசர அறிவிப்புsamugammedia மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற வாகன இலக்கத்தகடுகளில், வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் கொழும்புக்கு திருப்பி அனுப்புவது தொடர்பாக யாழ் மாவட்ட செயலகம் அவசர அறிவிப்பை விடுத்துள்ளது.மோட்டார்வாகன போக்குவரத்து தலைமை அலுவலகத்திலிருந்து 2023.01.01 ஆந் திகதி முதல் 2023.06.30 ஆந் திகதி வரையான காலப்பகுதியில் மோட்டார்வாகன போக்குவரத்து திணைக்கள யாழ்ப்பாண அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற வாகன இலக்கத்தகடுகளில், வாகன உரிமையாளர்களால் இதுவரை பெற்றுக்கொள்ளப்படாதுள்ள இலக்கத்தகடுகள் 2023 ஒக்ரோபர் மாதம் கொழும்பு தலைமை அலுவலகத்திற்கு திருப்பி அனுப்பப்படவுள்ளன.மேற்படி வாகன இலக்கத்தகடுகளை, வாகன உரிமையாளர்கள் வாகனப்பதிவுப் புத்தகம், தேசிய அடையாள அட்டை, பழைய வாகன இலக்கத்தகடுகள் மற்றும் வாகன இலக்கம் பொறித்த ஒட்டும் தாள் என்பவற்றை, 2023.09.30 ஆந் திகதிக்கு முன்னர் யாழ் மாவட்ட மோட்டார்வாகன போக்குவரத்து அலுவலகத்தில் சமர்ப்பித்து தங்கள் வாகனங்களுக்குரிய இலக்கத்தகடுகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.மேற்படி வாகன இலக்கத்தகடுகளின் பட்டியல் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

Advertisement