12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியப்பாவும் அதற்கு உடந்தையாக இருந்த பாட்டியும் கோனகங்ஆர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் மொனராகலை - கோனகங்ஆர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேளை செய்வதால் சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.
ஆகஸ்ட் 08 ஆம் திகதி அன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ள நிலையில் சிறுமியின் பெரியப்பா சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பிரதான சந்தேக நபரான பெரியப்பா கைதுசெய்யப்பட்டுள்ளார்.
பின்னர் பிரதான சந்தேக நபரான பெரியப்பாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பாட்டி 26 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்ஆர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியப்பா; உடந்தையாக இருந்த பாட்டி கைது 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பெரியப்பாவும் அதற்கு உடந்தையாக இருந்த பாட்டியும் கோனகங்ஆர பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் மொனராகலை - கோனகங்ஆர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளான சிறுமியின் தாய் வெளிநாட்டில் வேளை செய்வதால் சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்துள்ளார்.ஆகஸ்ட் 08 ஆம் திகதி அன்று சிறுமி வீட்டில் தனியாக இருந்துள்ள நிலையில் சிறுமியின் பெரியப்பா சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் பிரதான சந்தேக நபரான பெரியப்பா கைதுசெய்யப்பட்டுள்ளார்.பின்னர் பிரதான சந்தேக நபரான பெரியப்பாவிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குற்றத்திற்கு உடந்தையாக இருந்த சிறுமியின் பாட்டி 26 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கோனகங்ஆர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.