• Nov 28 2024

பதாள உலக குழுக்களுக்கு அவர்களது மொழியில் பதிலளிக்கப்படும்! பொலிஸ் மா அதிபர் அதிரடி

Chithra / Mar 14th 2024, 9:29 am
image

 

பாதாள உலகக் குழுக்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் பாதாள உலகக் குழு தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் தென் மாகாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.

இதன்போது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொலிஸ் மா அதிபர் யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படாது என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

பாதாள உலகக்குழு செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் என்பனவற்றை இல்லாதொழிக்கும் வரையில் யுக்திய நடவடிக்கை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.

அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு இனி எவ்வித மன்னிப்பும் கிடையாது .

தென் மாகாணத்தில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

பதாள உலக குழுக்களுக்கு அவர்களது மொழியில் பதிலளிக்கப்படும் பொலிஸ் மா அதிபர் அதிரடி  பாதாள உலகக் குழுக்களுக்கு அவர்களது மொழியிலேயே பதிலளிக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.அண்மைய நாட்களாக இடம்பெற்று வரும் பாதாள உலகக் குழு தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலிஸ் மா அதிபர் தென் மாகாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்திருந்தார்.இதன்போது கொஸ்கொட பொலிஸ் நிலையத்தில் விசேட கூட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பொலிஸ் மா அதிபர் யுக்திய நடவடிக்கை நிறுத்தப்படாது என மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.பாதாள உலகக்குழு செயற்பாடுகள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகம் என்பனவற்றை இல்லாதொழிக்கும் வரையில் யுக்திய நடவடிக்கை தொடரும் என அவர் தெரிவித்துள்ளார்.அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்யும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களுக்கு இனி எவ்வித மன்னிப்பும் கிடையாது .தென் மாகாணத்தில் இடம்பெற்று வரும் குற்றச் செயல்களை தடுக்க விசேட ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement