• Jan 11 2025

UNHCR உதவி உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு

Tharmini / Dec 14th 2024, 5:25 pm
image

ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் (UNHCR) அகதிகளுக்கான உதவி உயர் ஸ்தானிகரும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளருமான  ருவேந்திரினி மெனிக்திவெல, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, இலங்கையில் அகதிகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் UNHCR இன் அர்ப்பணிப்பு மற்றும் கணிசமான பங்களிப்புகளுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மெனிக்திவலவுடன் ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் இலங்கை அலுவலகத்தின் தலைவர் சஞ்சிதா சத்தியமூர்த்தி அவர்களும் இணைந்துகொண்டார். 

இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிரதமரின் செயலாளர் தபிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் பி.டபிள்யூ.ஜி.சி. சாகரிகா போகஹவத்த, மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

UNHCR உதவி உயர் ஸ்தானிகர் இலங்கை பிரதமருடன் சந்திப்பு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான உயர் ஸ்தானிகராலயத்தின் (UNHCR) அகதிகளுக்கான உதவி உயர் ஸ்தானிகரும், ஐக்கிய நாடுகள் சபையின் உதவிச் செயலாளருமான  ருவேந்திரினி மெனிக்திவெல, இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று மாலை பிரதமர் அலுவலகத்தில் சந்தித்தார்.இந்த சந்திப்பின் போது, இலங்கையில் அகதிகள் தொடர்பான சவால்களை எதிர்கொள்வதில் UNHCR இன் அர்ப்பணிப்பு மற்றும் கணிசமான பங்களிப்புகளுக்கு பிரதமர் தனது நன்றியைத் தெரிவித்தார்.இந்த சந்திப்பில் மெனிக்திவலவுடன் ஐ. நா அகதிகளுக்கான உயர் ஸ்தானிகர் இலங்கை அலுவலகத்தின் தலைவர் சஞ்சிதா சத்தியமூர்த்தி அவர்களும் இணைந்துகொண்டார். இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பிரதமரின் செயலாளர் தபிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் பி.டபிள்யூ.ஜி.சி. சாகரிகா போகஹவத்த, மற்றும் வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement