போரின்போது காஸாவில் அடையாளம் தெரியாத பல உடல்களைக் கண்டெடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.அந்த உடல்களை மீட்டு, அவற்றை அடையாளம் காணும் பணிகளை அதன் ராணுவம் முடுக்கிவிட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியது.
உடல்களை அடையாளம் காண பல மணி நேரம் எடுக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக இஸ்ரேலியர்களுடன் தமது அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.
2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸாவில் மூண்ட போரில் இதுவரை குறைந்தது 40,691 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துவிட்டனர்.
போரின் காரணமாக ஏறத்தாழ 94,060 பேர் காயமடைந்தனர்.
இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் கூடிய விரைவில் கையெழுத்திடப்படக்கூடும் என்று அதிபர் பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
காஸாவில் அடையாளம் தெரியாத உடல்கள் கண்டெடுப்பு ; இஸ்ரேல் தகவல் போரின்போது காஸாவில் அடையாளம் தெரியாத பல உடல்களைக் கண்டெடுத்ததாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.அந்த உடல்களை மீட்டு, அவற்றை அடையாளம் காணும் பணிகளை அதன் ராணுவம் முடுக்கிவிட்டுள்ளதாக இஸ்ரேல் கூறியது.உடல்களை அடையாளம் காண பல மணி நேரம் எடுக்கும் என்றும் தெரியவந்துள்ளது.இதுதொடர்பாக இஸ்ரேலியர்களுடன் தமது அதிகாரிகள் தொடர்பில் இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.கண்டெடுக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கை குறித்த தகவல்கள் வெளியிடப்படவில்லை.2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலிருந்து காஸாவில் மூண்ட போரில் இதுவரை குறைந்தது 40,691 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துவிட்டனர்.போரின் காரணமாக ஏறத்தாழ 94,060 பேர் காயமடைந்தனர்.இதற்கிடையே, போர் நிறுத்த ஒப்பந்தம் கூடிய விரைவில் கையெழுத்திடப்படக்கூடும் என்று அதிபர் பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.