• Sep 20 2024

புதிய ஆளுநர்களாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள்..! ரணில் திட்டம் - வெளியான தகவல் samugammedia

Chithra / May 8th 2023, 11:09 pm
image

Advertisement

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய மாகாண ஆளுநர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரை நியமிக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்புச் சட்டத்தின் 154 (பி) பிரிவின் கீழ் புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.

இந்தநிலையில் ஆளுநர் பதவிக்கான வேட்பாளராக சமூக வலைதளங்களில் தமது பெயர் குறிப்பிடப்படுவதை பற்றி தாம் எதனையும் கூறமுடியாது என்றும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறும் அனைவரும் அரசியல் ரீதியாக அழிக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்து தொடர்பிலும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் வினவப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், தமது தந்தை மறைந்த அமைச்சர் காமினி திஸாநாயக்கவுக்கும் இது பொருந்தும் எனவும், தமது தந்தை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்பியே தமது இறுதி மூச்சை விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் ஏற்பட்ட முறுகலே தமது தந்தையை மாற்றுவழிக்கு இட்டுச்சென்றதாகவும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தமது தந்தை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவே மேடையில் இறுதி மூச்சை விட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


புதிய ஆளுநர்களாக ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள். ரணில் திட்டம் - வெளியான தகவல் samugammedia ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, புதிய மாகாண ஆளுநர்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிலரை நியமிக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.அரசியலமைப்புச் சட்டத்தின் 154 (பி) பிரிவின் கீழ் புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதிக்கு அதிகாரம் உள்ளது.இந்தநிலையில் ஆளுநர் பதவிக்கான வேட்பாளராக சமூக வலைதளங்களில் தமது பெயர் குறிப்பிடப்படுவதை பற்றி தாம் எதனையும் கூறமுடியாது என்றும் நவீன் திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறும் அனைவரும் அரசியல் ரீதியாக அழிக்கப்பட்டுள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்து தொடர்பிலும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்கவிடம் வினவப்பட்டது.இதற்கு பதிலளித்த அவர், தமது தந்தை மறைந்த அமைச்சர் காமினி திஸாநாயக்கவுக்கும் இது பொருந்தும் எனவும், தமது தந்தை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு திரும்பியே தமது இறுதி மூச்சை விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவுடன் ஏற்பட்ட முறுகலே தமது தந்தையை மாற்றுவழிக்கு இட்டுச்சென்றதாகவும் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.எனினும் தமது தந்தை மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு வந்து ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகவே மேடையில் இறுதி மூச்சை விட்டார் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement