• Mar 13 2025

உள்ளூராட்சித் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக போட்டியிடவுள்ள குழுக்களுக்கு ஐக்கிய தமிழர் ஒன்றியம் அழைப்பு..!

Sharmi / Mar 11th 2025, 11:22 am
image

தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கருதி  எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து களமிறங்க முன்வரவேண்டும் என ஐக்கிய தமிழர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் வெளியிட்ட அறிக்கையிலேலே மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த பொதுத் தேர்தலில் 21 சுயேச்சைக் குழுக்களாகப் பிரிந்து நின்று போட்டியிட்டதன் பலனாக வாக்குகளைச் சிதறடிக்கப்பட்டு தென்பகுதிக் கட்சி வடமாகாணத்தில் மூன்று ஆசனங்களைக் கைப்பற்ற(NPP) வழிவகுத்துள்ளோம் . 

இது தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதை உணர்வோம். 

இந்நிலை வடபுல அரசியல் களத்தில் இனியும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே கடந்த பொதுத் தேர்தலில் நின்று போட்டியிட்ட 17 சுயேச்சைக் குழுக்களை ஒன்றிணைத்து "ஐக்கிய தமிழர் ஒன்றியம்" என்ற தமிழர் நலன்சார் அமைப்பினை உருவாக்கியுள்ளோம். 

அது மட்டுமன்றி உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பிலும் கலந்துரையாடி வருகிறோம். சில கட்சிகளுடன் உடன்பாடும் கண்டுள்ளோம். 

தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காக தமிழ் மக்களின் விடிவிற்காக அனைத்து கட்சிகளும் ஐக்கியப்பட்டு நிற்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளதை நாம் அனைவரும் உணர்வோம்.

எனவே! தனித்துக் களமிறங்கவுள்ள  சுயேச்சைக் குழுக்களுக்கு அவசியமான அவசரமான வேண்டுதலை ஐக்கிய தமிழர் ஒன்றியமான நாம் விடுகின்றோம். தனித்துப் போட்டியிடாது எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். 

வேட்பாளர்களும் வாக்காளர்களும் சிதறுண்டு போகாமல் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கருதி ஒன்றிணைந்து களமிறங்குவோம்.

குறுகிய நோக்கை கைவிட்டு தூர நோக்குடன் சிந்திப்போம் வாருங்கள்.

ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதையாக தென்பகுதிச் சிங்களக் கட்சிகள் நம் மண்ணில் கால் ஊன்றுவதை நம்மை ஆட்சி செய்வதை தடுத்து நிறுத்துவோம் வாருங்கள்.நம் தமிழர் அந்நியர்களுக்கு விலை போவதை தடுப்போம் வாரீர் வெல்லும் தமிழ் தேசியம் நாளை நமதே என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.




உள்ளூராட்சித் தேர்தலில் சுயேச்சைக் குழுவாக போட்டியிடவுள்ள குழுக்களுக்கு ஐக்கிய தமிழர் ஒன்றியம் அழைப்பு. தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கருதி  எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அனைத்து தமிழ்த் தேசிய கட்சிகளும் ஒன்றிணைந்து களமிறங்க முன்வரவேண்டும் என ஐக்கிய தமிழர் ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.இது தொடர்பில் ஐக்கிய தமிழர் ஒன்றியத்தின் தலைவர் வெளியிட்ட அறிக்கையிலேலே மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,கடந்த பொதுத் தேர்தலில் 21 சுயேச்சைக் குழுக்களாகப் பிரிந்து நின்று போட்டியிட்டதன் பலனாக வாக்குகளைச் சிதறடிக்கப்பட்டு தென்பகுதிக் கட்சி வடமாகாணத்தில் மூன்று ஆசனங்களைக் கைப்பற்ற(NPP) வழிவகுத்துள்ளோம் . இது தமிழ் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி என்பதை உணர்வோம். இந்நிலை வடபுல அரசியல் களத்தில் இனியும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே கடந்த பொதுத் தேர்தலில் நின்று போட்டியிட்ட 17 சுயேச்சைக் குழுக்களை ஒன்றிணைத்து "ஐக்கிய தமிழர் ஒன்றியம்" என்ற தமிழர் நலன்சார் அமைப்பினை உருவாக்கியுள்ளோம். அது மட்டுமன்றி உள்ளூராட்சித் தேர்தலில் களமிறங்கியுள்ள தமிழ்த் தேசிய கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுவது தொடர்பிலும் கலந்துரையாடி வருகிறோம். சில கட்சிகளுடன் உடன்பாடும் கண்டுள்ளோம். தமிழ்த் தேசியத்தின் இருப்புக்காக தமிழ் மக்களின் விடிவிற்காக அனைத்து கட்சிகளும் ஐக்கியப்பட்டு நிற்பது காலத்தின் கட்டாயமாகவுள்ளதை நாம் அனைவரும் உணர்வோம்.எனவே தனித்துக் களமிறங்கவுள்ள  சுயேச்சைக் குழுக்களுக்கு அவசியமான அவசரமான வேண்டுதலை ஐக்கிய தமிழர் ஒன்றியமான நாம் விடுகின்றோம். தனித்துப் போட்டியிடாது எங்களுடன் இணைந்து கொள்ளுங்கள். வேட்பாளர்களும் வாக்காளர்களும் சிதறுண்டு போகாமல் தமிழ்த் தேசியத்தின் இருப்புக்கருதி ஒன்றிணைந்து களமிறங்குவோம்.குறுகிய நோக்கை கைவிட்டு தூர நோக்குடன் சிந்திப்போம் வாருங்கள்.ஆடு நனையுதென்று ஓநாய் அழுத கதையாக தென்பகுதிச் சிங்களக் கட்சிகள் நம் மண்ணில் கால் ஊன்றுவதை நம்மை ஆட்சி செய்வதை தடுத்து நிறுத்துவோம் வாருங்கள்.நம் தமிழர் அந்நியர்களுக்கு விலை போவதை தடுப்போம் வாரீர் வெல்லும் தமிழ் தேசியம் நாளை நமதே என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement