இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எந்த சவாலையும் எதிர்கொள்ள, தாம் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாதனது 'X' பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்தை வழிநடத்தி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையில் ஒற்றுமை தொடரும் என்றும் பொன்சேகா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
மூன்று தசாப்த கால மோதலின் பின்னர், இலங்கை விடுவிக்கப்பட்டு, மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு ஒன்றரை தசாப்தங்கள் கடந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
போரில் ஏராளமானோர் உயிரிழந்தும் மற்றும் பெரும்பாலானோர் கை கால்களையும் இழந்துள்ளனர்.
“போர் இனிமையானது அல்ல. எனவே சமாதானத்துக்கும் விலை உண்டு” என்று பொன்சேகா கூறியுள்ளார்.
இந்நிலையில், அடுத்த பரம்பரைக்கு போரை கொண்டு செல்ல மாட்டேன் என்று, தாம் உறுதியளித்தப்படி, முப்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் ஆதரவுடன், தாம், தமது வார்த்தையை நிறைவேற்றியதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஒற்றுமை தொடரும்; எந்த சவாலையும் எதிர்கொள்ள தயார் பொன்சேகா தெரிவிப்பு இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு எந்த சவாலையும் எதிர்கொள்ள, தாம் தயார் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாதனது 'X' பதிவில் தெரிவித்துள்ளார்.தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்தை வழிநடத்தி 15 வருடங்கள் கடந்துள்ள நிலையில், இலங்கையில் ஒற்றுமை தொடரும் என்றும் பொன்சேகா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.மூன்று தசாப்த கால மோதலின் பின்னர், இலங்கை விடுவிக்கப்பட்டு, மீண்டும் ஒன்றிணைக்கப்பட்டு ஒன்றரை தசாப்தங்கள் கடந்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.போரில் ஏராளமானோர் உயிரிழந்தும் மற்றும் பெரும்பாலானோர் கை கால்களையும் இழந்துள்ளனர்.“போர் இனிமையானது அல்ல. எனவே சமாதானத்துக்கும் விலை உண்டு” என்று பொன்சேகா கூறியுள்ளார்.இந்நிலையில், அடுத்த பரம்பரைக்கு போரை கொண்டு செல்ல மாட்டேன் என்று, தாம் உறுதியளித்தப்படி, முப்படையினர் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரின் ஆதரவுடன், தாம், தமது வார்த்தையை நிறைவேற்றியதாக பொன்சேகா தெரிவித்துள்ளார்.