• Nov 23 2024

பிரிட்டிஷ் கவுன்சிலிடமிருந்து இலங்கையில் IELTS பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக புலமைப்பரிசில்...!samugammedia

Sharmi / Dec 11th 2023, 3:32 pm
image

நாடு முழுவதிலுமிருந்து IELTS பரீட்சைக்கு தோற்றி சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவர்களுக்கு, தமது தெரிவுக்குரிய பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசிலை பிரிட்டிஷ் கவுன்சில்  வழங்கியுள்ளது.

நவம்பர் 27ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் நடைபெற்ற IELTS பரிசில் வழங்கும் நிகழ்வின் போது இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்தது.

உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் கற்கைகள் நடைபெறும் பல்கலைக்கழகங்களில் தமது கற்கைகளை தொடர்வதற்கான கட்டணங்களில் 5000 ஸ்ரேளிங் பவுண்களை தமது உயர் கற்கைகளை தொடர்வதற்கு பிரிட்டிஷ் கவுன்சில் வாய்ப்பளித்திருந்தது.

இதனூடாக, இளம் மாணவர்களுக்கு தமது கல்விசார் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான உதவிகளை வழங்கியிருந்தது.

2023 முதல் 2024 மார்ச் மாதம் வரையில் தமது பட்டப்படிப்பு அல்லது பட்டப்பின்படிப்பு கற்கைகளை உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் தொடர்வதற்காக IELTS பரீட்சையினூடாக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு இந்த வருடாந்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது.

இலங்கை, சீனா, ஜப்பான், ஹொங் கொங், இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, வியட்நாம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வதியும் IELTS பரீட்சைக்கு தோற்றுவோருக்கு இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.

கடுமையான விண்ணப்பத் தெரிவு அடிப்படையில், இலங்கையிலிருந்து தெரிவாகிய ஆறு வெற்றியாளர்களுக்கு உயர் பணப் பரிசு வழங்கப்பட்டிருந்தது:   

1ஆம் பரிசு – சுஹாஷி தல்கஸ்பிட்டிய

2ஆம் பரிசு – திலீப கமகே

2ஆம் பரிசு – ரவீஷ விக்ரமசிங்க

3ஆம் பரிசு – குஷாதினி மல்லவாரச்சி

3ஆம் பரிசு – மொஹமட் ரஸ்லான்

3ஆம் பரிசு – பென்ஜமின் தர்மரட்னம்

பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையின் பணிப்பாளர் ஒர்லாண்டோ எட்வர்ட்ஸ் இந்த பரிசளிப்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், “உலகத் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களில் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு மாணவர்களுக்கு உதவும் வகையில், புதிய நாடுகளுக்கு பயணம் செய்து, புதிய கலாசாரத்தில் தம்மை ஆழத்தி, சர்வதேச IELTS சமூகத்தில் தம்மையும் அங்கத்துவம் வகிப்பதற்கான வாய்ப்பை IELTS பரிசு வழங்குகின்றது.” என்றார். 



பிரிட்டிஷ் கவுன்சிலிடமிருந்து இலங்கையில் IELTS பரீட்சையில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல்கலைக்கழக புலமைப்பரிசில்.samugammedia நாடு முழுவதிலுமிருந்து IELTS பரீட்சைக்கு தோற்றி சிறப்புத் தேர்ச்சி பெற்ற ஆறு மாணவர்களுக்கு, தமது தெரிவுக்குரிய பல்கலைக்கழக கல்வியை தொடர்வதற்கான புலமைப்பரிசிலை பிரிட்டிஷ் கவுன்சில்  வழங்கியுள்ளது. நவம்பர் 27ஆம் திகதி கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சில் நூலகத்தில் நடைபெற்ற IELTS பரிசில் வழங்கும் நிகழ்வின் போது இந்த புலமைப்பரிசில் வழங்கப்பட்டிருந்தது.உலகளாவிய ரீதியில் ஆங்கிலத்தில் கற்கைகள் நடைபெறும் பல்கலைக்கழகங்களில் தமது கற்கைகளை தொடர்வதற்கான கட்டணங்களில் 5000 ஸ்ரேளிங் பவுண்களை தமது உயர் கற்கைகளை தொடர்வதற்கு பிரிட்டிஷ் கவுன்சில் வாய்ப்பளித்திருந்தது. இதனூடாக, இளம் மாணவர்களுக்கு தமது கல்விசார் கனவுகளை நனவாக்கிக் கொள்வதற்கான உதவிகளை வழங்கியிருந்தது.2023 முதல் 2024 மார்ச் மாதம் வரையில் தமது பட்டப்படிப்பு அல்லது பட்டப்பின்படிப்பு கற்கைகளை உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் தொடர்வதற்காக IELTS பரீட்சையினூடாக விண்ணப்பித்திருந்த மாணவர்களுக்கு இந்த வருடாந்த போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு வழங்கப்படுகின்றது. இலங்கை, சீனா, ஜப்பான், ஹொங் கொங், இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்வான், தாய்லாந்து, வியட்நாம், பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் வதியும் IELTS பரீட்சைக்கு தோற்றுவோருக்கு இந்தப் போட்டியில் பங்கேற்க முடியும்.கடுமையான விண்ணப்பத் தெரிவு அடிப்படையில், இலங்கையிலிருந்து தெரிவாகிய ஆறு வெற்றியாளர்களுக்கு உயர் பணப் பரிசு வழங்கப்பட்டிருந்தது:   1ஆம் பரிசு – சுஹாஷி தல்கஸ்பிட்டிய2ஆம் பரிசு – திலீப கமகே2ஆம் பரிசு – ரவீஷ விக்ரமசிங்க3ஆம் பரிசு – குஷாதினி மல்லவாரச்சி3ஆம் பரிசு – மொஹமட் ரஸ்லான்3ஆம் பரிசு – பென்ஜமின் தர்மரட்னம்பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையின் பணிப்பாளர் ஒர்லாண்டோ எட்வர்ட்ஸ் இந்த பரிசளிப்ப நிகழ்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையில், “உலகத் தரம் வாய்ந்த கல்வி நிலையங்களில் தமது உயர் கல்வியைத் தொடர்வதற்கு மாணவர்களுக்கு உதவும் வகையில், புதிய நாடுகளுக்கு பயணம் செய்து, புதிய கலாசாரத்தில் தம்மை ஆழத்தி, சர்வதேச IELTS சமூகத்தில் தம்மையும் அங்கத்துவம் வகிப்பதற்கான வாய்ப்பை IELTS பரிசு வழங்குகின்றது.” என்றார். 

Advertisement

Advertisement

Advertisement