நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை கொழும்புக்கு அவசரமாக வருமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்படி, நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வளாகங்களின் அதிபர்கள் மற்றும் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இன்று(27) முற்பகல் 11 மணிக்கு கொழும்பிலுள்ள கல்வி இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் கொழும்புக்கு அழைப்பு. நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் கல்வி சாரா ஊழியர்கள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பை அடுத்து குறித்த விடயம் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்ளும் நோக்கில் பல்கலைக்கழக துணைவேந்தர்களை கொழும்புக்கு அவசரமாக வருமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.இதன்படி, நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், வளாகங்களின் அதிபர்கள் மற்றும் நிறுவனங்களின் பணிப்பாளர்கள் இன்று(27) முற்பகல் 11 மணிக்கு கொழும்பிலுள்ள கல்வி இராஜாங்க அமைச்சரின் அலுவலகத்திற்கு வருகை தரவேண்டும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரால் வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.