• Nov 28 2024

சீரற்ற காலநிலையால் கிண்ணியாவில் விவசாய செய்கைக்கு பாதிப்பு...!samugammedia

Sharmi / Jan 3rd 2024, 1:12 pm
image

நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பகுதியில் உள்ள மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா உப்பாறு கிராம சேவகர் பிரிவின் மயிலப்பன் சேனை,சோளவெட்டுவான்,காரவெட்டுவான்,கண்டல் காடு போன்ற கிராமங்களில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மேட்டு நிலப் பயிர்களான மிளகாய்,மரவெள்ளி ,கத்தரி வெண்டி,கச்சான் உள்ளிட்ட பயிரினங்கள் அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

தாங்கள் பயிர்களை மேற்கொண்டு பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க பல ரூபாக்களை முதலீடு செய்தும் போதிய விளைச்சல் கிடைக்கவில்லை எனவும் வெள்ள நீரினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளது.

எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய அதிகாரிகள் தங்களுக்கு தேவையான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.



சீரற்ற காலநிலையால் கிண்ணியாவில் விவசாய செய்கைக்கு பாதிப்பு.samugammedia நாட்டில் ஏற்பட்ட சீரற்ற கால நிலை காரணமாக கிண்ணியா பகுதியில் உள்ள மேட்டு நிலப் பயிர்ச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக தோட்டச் செய்கையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.கிண்ணியா உப்பாறு கிராம சேவகர் பிரிவின் மயிலப்பன் சேனை,சோளவெட்டுவான்,காரவெட்டுவான்,கண்டல் காடு போன்ற கிராமங்களில் கடந்த ஐந்து நாட்களுக்கும் மேலாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாக மேட்டு நிலப் பயிர்களான மிளகாய்,மரவெள்ளி ,கத்தரி வெண்டி,கச்சான் உள்ளிட்ட பயிரினங்கள் அழிந்துள்ளதால் நஷ்டமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தாங்கள் பயிர்களை மேற்கொண்டு பயிர்ச் செய்கையை ஆரம்பிக்க பல ரூபாக்களை முதலீடு செய்தும் போதிய விளைச்சல் கிடைக்கவில்லை எனவும் வெள்ள நீரினால் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளது.எனவே, இது தொடர்பில் கவனம் செலுத்தி உரிய அதிகாரிகள் தங்களுக்கு தேவையான நஷ்ட ஈடுகளை பெற்றுத் தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement