• May 19 2024

காலிமுகத்திடல் போராட்டம்...!இலங்கையில் புதிய சரித்திரத்தை உருவாக்கியது – சுமந்திரன்...! samugammedia

Sharmi / Apr 19th 2023, 11:54 am
image

Advertisement

நாட்டிலுள்ள சகல இனங்களும் வெவ்வேறு எண்ணிக்கையில் காணப்பட்டாலும் அரச அதிகாரங்களை சமநிலையில் கையாளக்கூடியதாக ஆட்சி முறையே அவசியம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

பாசத்திற்கான யாத்திரை எனும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டத்தின் பயணம் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.

இதில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

கடந்த வருடம் நாட்டிலே மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென நீண்டதொரு போராட்டம் நடாத்தப்பட்டு, சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி நாட்டைவிட்டு ஓடியதுடன் பதவியையும் இராஜனாமா செய்ததுடன் உட்பட பிரதம மந்திரிஇ நிதியமைச்சர் இராஜனாமா செய்யுமளவிற்கு அந்த மாற்றங்கள் நாட்டிலே ஏற்பட்டிருந்ததாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் இளைஞர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்த முழுமையான மாற்றத்தைப் பெறுவதற்கு முன்னராக அந்த இயக்கம் வேறு ஆட்களாலே கையகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனாலும் இன மத பேதம் களையப்பட்டு நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற புதிய சந்ததியினரின் நல்லெண்ண  நோக்கத்திற்கு நாங்களும் வலுச்சேர்க்கின்றோம்.

இந்த நாட்டில் பிரதானமாக இனப்பிரச்சினையுடன் ஊழல் பிரச்சினை காணப்படுகின்றது.

இவை களைந்தெறியப்படவேண்டும். சகல இனத்தவர்களும் அரச அதிகாரங்களை சமமாக கையாளக்கூடியவாறான மாற்றங்ளை ஏற்படுத்த வேண்டும் என்பது இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய ஆரம்ப காலத்திலிருந்த கோட்பாடாக இருந்ததாக சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

காலிமுகத்திடல் போராட்டம்.இலங்கையில் புதிய சரித்திரத்தை உருவாக்கியது – சுமந்திரன். samugammedia நாட்டிலுள்ள சகல இனங்களும் வெவ்வேறு எண்ணிக்கையில் காணப்பட்டாலும் அரச அதிகாரங்களை சமநிலையில் கையாளக்கூடியதாக ஆட்சி முறையே அவசியம் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பனர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.பாசத்திற்கான யாத்திரை எனும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள புதிய வேலைத்திட்டத்தின் பயணம் இன்று யாழ்ப்பாணம் நல்லூரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.இதில் கலந்து கொண்ட பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.கடந்த வருடம் நாட்டிலே மாற்றமொன்றை ஏற்படுத்த வேண்டுமென நீண்டதொரு போராட்டம் நடாத்தப்பட்டு, சரித்திரத்தில் என்றுமில்லாதவாறு மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஜனாதிபதி நாட்டைவிட்டு ஓடியதுடன் பதவியையும் இராஜனாமா செய்ததுடன் உட்பட பிரதம மந்திரிஇ நிதியமைச்சர் இராஜனாமா செய்யுமளவிற்கு அந்த மாற்றங்கள் நாட்டிலே ஏற்பட்டிருந்ததாக சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.ஆனால் இளைஞர்கள் மற்றும் மக்கள் எதிர்பார்த்த முழுமையான மாற்றத்தைப் பெறுவதற்கு முன்னராக அந்த இயக்கம் வேறு ஆட்களாலே கையகப்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.ஆனாலும் இன மத பேதம் களையப்பட்டு நாடு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற புதிய சந்ததியினரின் நல்லெண்ண  நோக்கத்திற்கு நாங்களும் வலுச்சேர்க்கின்றோம்.இந்த நாட்டில் பிரதானமாக இனப்பிரச்சினையுடன் ஊழல் பிரச்சினை காணப்படுகின்றது. இவை களைந்தெறியப்படவேண்டும். சகல இனத்தவர்களும் அரச அதிகாரங்களை சமமாக கையாளக்கூடியவாறான மாற்றங்ளை ஏற்படுத்த வேண்டும் என்பது இலங்கை தமிழரசுக் கட்சியினுடைய ஆரம்ப காலத்திலிருந்த கோட்பாடாக இருந்ததாக சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement