• Mar 26 2025

பஹ்ரைனுக்குப் பயணிப்போருக்கு தடுப்பூசி கட்டாயம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு

Chithra / Mar 25th 2025, 8:59 am
image

  

பஹ்ரைன் நாட்டிற்குச் செல்லும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இலங்கையர்களுக்கும் மெனிங்கோகோகல் தடுப்பூசி இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் சுகாதார அமைச்சு  அறிவித்துள்ளது.

பஹ்ரைன் அரசு மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) அறிவுறுத்தலின் பேரில், வெளியுறவு அமைச்சு, பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை இலங்கையர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.

மெனிங்கோகோகல் நோய் என்பது நெய்சீரியா மெனிங்கிடிடிஸ் (மெனிங்கோகோகஸ் என்றும் அழைக்கப்படுகிறது) என்ற பக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.

இந்நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இறப்பு அதிகரிக்கும்.

ஆனால் இந்நோயை தடுப்பூசி மூலம் தடுக்க முடியும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பஹ்ரைனுக்குப் பயணிப்போருக்கு தடுப்பூசி கட்டாயம் - சுகாதார அமைச்சு அறிவிப்பு   பஹ்ரைன் நாட்டிற்குச் செல்லும் அனைத்து வெளிநாட்டு தொழிலாளர்களுக்கும் இலங்கையர்களுக்கும் மெனிங்கோகோகல் தடுப்பூசி இப்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பஹ்ரைன் சுகாதார அமைச்சு  அறிவித்துள்ளது.பஹ்ரைன் அரசு மற்றும் வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சிலின் (GCC) அறிவுறுத்தலின் பேரில், வெளியுறவு அமைச்சு, பஹ்ரைனில் உள்ள இலங்கை தூதரகம் ஆகியவை இலங்கையர்களுக்கான தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன.மெனிங்கோகோகல் நோய் என்பது நெய்சீரியா மெனிங்கிடிடிஸ் (மெனிங்கோகோகஸ் என்றும் அழைக்கப்படுகிறது) என்ற பக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்று நோயாகும்.இந்நோய்க்கு சிகிச்சையளிக்கப்படாவிட்டால் இறப்பு அதிகரிக்கும்.ஆனால் இந்நோயை தடுப்பூசி மூலம் தடுக்க முடியும் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now