• Sep 20 2024

வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்..!

Sharmi / Sep 2nd 2024, 12:42 pm
image

Advertisement

வரலாற்று சிறப்பு மிக்க யாழ் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா இன்றையதினம் காலை 9.15 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது.

 ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.

வல்லிபுர ஆழ்வாரின் கொடியேற்ற நிகழ்வை காண  யாழின் பல பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 16 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 17 ஆம் திகதி சமுத்திர திருவிழாவும் இடம்பெறவுள்ளதுடன், மறுநாள் கேணித்தீர்த்தமும், இடம் பெறவுள்ளன.

வல்லிபுர ஆழ்வாரின் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், சைவ சமய முறைப்படி திருவிழாவில் கலந்துகொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், திருவிழா காலங்களில் சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பருத்தித்துறை பொலீஸாரும் மேற்கொண்டுள்ளதுடன், போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகளும் சம்மந்தப்பட்ட தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


வல்லிபுர ஆழ்வார் ஆலய மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம். வரலாற்று சிறப்பு மிக்க யாழ் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா இன்றையதினம் காலை 9.15 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் கொடியேற்ற நிகழ்வு இடம்பெற்றது.வல்லிபுர ஆழ்வாரின் கொடியேற்ற நிகழ்வை காண  யாழின் பல பகுதிகளிலும் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தமது வேண்டுதல்களை நிறைவேற்றியதாக தெரிவிக்கப்படுகிறது.இதேவேளை, எதிர்வரும் 15ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், 16 ஆம் திகதி தேர்த்திருவிழாவும், 17 ஆம் திகதி சமுத்திர திருவிழாவும் இடம்பெறவுள்ளதுடன், மறுநாள் கேணித்தீர்த்தமும், இடம் பெறவுள்ளன.வல்லிபுர ஆழ்வாரின் திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள், சைவ சமய முறைப்படி திருவிழாவில் கலந்துகொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், திருவிழா காலங்களில் சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேச சபையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பருத்தித்துறை பொலீஸாரும் மேற்கொண்டுள்ளதுடன், போக்குவரத்து மற்றும் ஏனைய வசதிகளும் சம்மந்தப்பட்ட தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement