• Nov 17 2024

நாட்டில் சத்திரசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் கடுமையாக பாதிப்பு..!

Chithra / Jun 9th 2024, 8:03 am
image

 

விசேட வைத்தியர்களின் கடுமையான பற்றாக்குறையால் பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் இரண்டாயிரம் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சுகாதார சேவைக்காக அங்கீகரிக்கப்பட்ட விசேட வைத்தியர்களின் எண்ணிக்கை நான்காயிரம் எனவும், தற்போது 2150 விசேட வைத்தியர்கள் மாத்திரமே இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, சத்திரசிகிச்சை நிபுணர்கள், குழந்தை நல வைத்தியர்கள், இரத்தம் ஏற்றும் நிபுணர்கள், பாலியல் நோய் வைத்தியர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் விசேட வைத்தியர்கள் நாடு திரும்பமாட்டார்கள் எனவும், அவர்களை நாட்டில் தக்கவைப்பதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் சத்திரசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் கடுமையாக பாதிப்பு.  விசேட வைத்தியர்களின் கடுமையான பற்றாக்குறையால் பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சை உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.நாடு முழுவதிலும் உள்ள வைத்தியசாலைகளில் சுமார் இரண்டாயிரம் விசேட வைத்தியர்களின் பற்றாக்குறை நிலவுவதாக சுகாதார அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.சுகாதார சேவைக்காக அங்கீகரிக்கப்பட்ட விசேட வைத்தியர்களின் எண்ணிக்கை நான்காயிரம் எனவும், தற்போது 2150 விசேட வைத்தியர்கள் மாத்திரமே இருப்பதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.சுகாதார அமைச்சின் கூற்றுப்படி, சத்திரசிகிச்சை நிபுணர்கள், குழந்தை நல வைத்தியர்கள், இரத்தம் ஏற்றும் நிபுணர்கள், பாலியல் நோய் வைத்தியர்கள் மற்றும் சத்திரசிகிச்சை நிபுணர்களுக்கு பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளமையினால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.வெளிநாடுகளுக்குச் செல்லும் விசேட வைத்தியர்கள் நாடு திரும்பமாட்டார்கள் எனவும், அவர்களை நாட்டில் தக்கவைப்பதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement