• May 17 2024

வசந்த முதலிகே உள்ளிட்ட 61 பேர் பிணையில் விடுதலை! SamugamMedia

Chithra / Feb 27th 2023, 5:06 pm
image

Advertisement

பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்களை இன்று(27) கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 23ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

ஹோமாகம பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தை, திறக்குமாறு வலியுறுத்தி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இவ்வாறு கல்வி அமைச்சுக்கு சென்றிருந்தனர்.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 62 பேரும் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்தநிலையில், இன்றைய தினம் குறித்த நபர்களை கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

வசந்த முதலிகே உள்ளிட்ட 61 பேர் பிணையில் விடுதலை SamugamMedia பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த குற்றச்சாட்டில் கைதான அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சந்தேகநபர்களை இன்று(27) கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.கடந்த 23ஆம் திகதி பத்தரமுல்லையில் உள்ள கல்வி அமைச்சுக்குள், பலவந்தமாக நுழைய முயற்சித்த அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய இணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட 62 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.ஹோமாகம பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகத்தை, திறக்குமாறு வலியுறுத்தி, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் இவ்வாறு கல்வி அமைச்சுக்கு சென்றிருந்தனர்.இதனையடுத்து, கைது செய்யப்பட்ட 62 பேரும் கடந்த 24ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.இந்தநிலையில், இன்றைய தினம் குறித்த நபர்களை கடுவலை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement