கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார அறிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கோப் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவித்தார்.
எவ்வாறாயினும், இந்த அறிவிப்பையடுத்து, தாம் உடனடியாக கோப் குழுவிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
இதேவேளை, கோப் குழுவிலிருந்து நேற்று வரை 7 எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
வசந்த யாப்பாவும் கோப் குழுவில் இருந்து விலகல். கோப் எனப்படும் அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழுவிலிருந்து விலகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார அறிவித்துள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார கோப் குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அறிவித்தார்.எவ்வாறாயினும், இந்த அறிவிப்பையடுத்து, தாம் உடனடியாக கோப் குழுவிலிருந்து விலகுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.இதேவேளை, கோப் குழுவிலிருந்து நேற்று வரை 7 எதிர்த்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.