• Dec 07 2023

வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு...! கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு...! samugammedia

Sharmi / Nov 20th 2023, 11:22 pm
image

Advertisement

வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பில்  இலங்கைப் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி  கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு  விசாரணைக்காக களம் இறக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வட்டுக்கோட்டை சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் தான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணை நீதியாக இடம்பெற தேவை ஏற்படின் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக அழைக்கப்படும் என தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்தார்.


வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு. கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு. samugammedia வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பில்  இலங்கைப் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி  கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு  விசாரணைக்காக களம் இறக்கப்படுவார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் தான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணை நீதியாக இடம்பெற தேவை ஏற்படின் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக அழைக்கப்படும் என தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement